மண்டலங்களுக்கு நிதி ஒதுக்காத காரணத்தால் பணிகள் முடக்கம்

Updated : ஆக 25, 2022 | Added : ஆக 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் கூட்டம் நடந்தது. மண்டல தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, பாண்டிச்செல்வி, சுவிதா பேசியதாவது: மண்டலங்களுக்கு நிதி ஒதுக்காததால் அடிப்படை பணிகள் முடங்கியுள்ளன. கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். கழிவுநீர், குப்பை அகற்ற 'சக்சன்', 'ஜெட்
மண்டலங்களுக்கு நிதி ஒதுக்காத காரணத்தால் பணிகள் முடக்கம்

மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் கூட்டம் நடந்தது. மண்டல தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, பாண்டிச்செல்வி, சுவிதா பேசியதாவது: மண்டலங்களுக்கு நிதி ஒதுக்காததால் அடிப்படை பணிகள் முடங்கியுள்ளன.

கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். கழிவுநீர், குப்பை அகற்ற 'சக்சன்', 'ஜெட் ராடிங்' லாரி வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவிகள் பாதுகாப்பு குறித்து சுற்றறிக்கை விட வேண்டும். ரோடு, தெரு விளக்கு, பாதாள சாக்கடை, குடிநீர் பணியை விரைவுபடுத்த வேண்டும், என்றனர்.

இருட்டு இருக்காது
மேயர், கமிஷனர் கூறியதாவது: தெருவிளக்கு பராமரிப்பு ஒப்பந்தம் முடிந்து மீண்டும் கோரப்பட்டது. தற்போது ஒப்பந்த பணி இறுதி கட்டம் எட்டியுள்ளதால் இனி மதுரை இருளில் மூழ்காது. ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தப்படும். குறித்த நேரம் டாக்டர்கள் பணியில் இருக்கும்படி சுற்றறிக்கை விடப்படும். விரைவில் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றனர். துணை கமிஷனர் முஜிபுர் ரஹ்மான், உதவி கமிஷனர்கள் சேகர், அமிர்தலிங்கம், மனோகரன், சுரேஷ்குமார், நகர் பொறியாளர் லட்சுமணன், நகர் நல அலுவலர் வினோத்குமார், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

கவுன்சிலர்களுக்கு சம்பளம் கொடுங்கப்பூ....
n 'கடந்த ஆட்சியில் வாங்கிய தெரு விளக்குகளுக்கு 'வேலுமணி லைட்' என பெயர். கம்பத்தில் பொருத்தியவுடன் 'ஆப்' ஆகி விடும். சொத்து வரி உயர மத்திய அரசு தான் காரணம். அதனால் பா.ஜ.,வுடன் நெருக்கம் காட்டும் அ.தி.மு.க., தான் வரியை குறைக்க சிபாரிசு செய்ய வேண்டும்' என தி.மு.க., கவுன்சிலர் ஜெயராஜ் பேசினார்.n 'என் வார்டில் அடிப்படை பிரச்னையை தீர்த்து வையிங்கனு எம்புட்டு முறைதாங்க மனு எழுதி கொடுக்கிறது. பேனாவும், என் கையும் தான் போச்சு. மேயர், கமிஷனர் நல்ல மனசுக்காரங்களா இருக்கீங்க... கவுன்சிலர்களுக்கு சம்பளம் கொடுங்கப்பூ' என அ.தி.மு.க., கவுன்சிலர் சொக்காயி வெள்ளந்தியாக பேசி சொக்க வைத்தார். n முதலில் கட்சி வாரியாக பேச வாய்ப்பு கொடுத்து விட்டு பின் மண்டல தலைவர்களை பேச விட்டு, கவுன்சிலர் கேள்வி நேரம் ஆரம்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சி, தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கொதித்தனர். கடைசியில் மேயர் வாய்ப்பும் வழங்கினார். n கவுன்சில் கூட்டம் காலை 10:30 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1:00 மணியை கடந்தும் நடந்ததால் பல கவுன்சிலர்கள் நைசாக 'எஸ்கேப்' ஆகினர். பெண் கவுன்சிலர்கள் சிலர் தொடர்ந்து கூட்டத்திற்கு வருவதில்லை. n கவுன்சிலர்கள் தினமும் மக்கள் குறைகளை கேட்டு தீர்வுகாண முயற்சி செய்வது பாராட்டுக்குரியது என மேயர் தெரிவித்தார். பேச வாய்ப்பு கேட்டு எழுதி தரும் அனைத்து கவுன்சிலர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

தினமலர் செய்தியை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர்

எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா பேசியதாவது: மாநகராட்சி பகுதியில் வணிக, குடியிருப்பு கட்டடங்களுக்கு சொத்து வரி நிர்ணயித்ததில் முரண்பாடு உள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. வசதியானவர்களுக்கு குறைத்தும், ஏழைகளுக்கு அதிகமாகவும் வரி நிர்ணயிக்கப்படுகிறது. முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் 2023ல் முடியும், 2024ல் முடியும் என அமைச்சர்கள் குழப்பமான பதிலை கூறுகிறார்கள். மாநகராட்சி பணிகளை மேற்கொள்ள அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கியது போல் சிறப்பு நிதி வழங்க வேண்டும். சென்னையில் இருந்து 'சூப்பர் சக்சன்' லாரியை வரவழைத்து பெயருக்கு சில இடங்களில் கழிவுநீரை சுத்தம் செய்து விட்டு அனுப்பி விட்டனர். மதுரையில் அதிகம் டெங்கு பரவுவதால் சுற்றுப்புற துாய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மண்டலத்திற்கு தலா ஒரு 'சூப்பர் சக்கர்' லாரி வேண்டும். மாநகராட்சி வருவாய் இனங்களுக்கு மட்டும் விரைந்து ஒப்பந்தம் கோரும் நிலையில் தெருவிளக்கு ஒப்பந்தத்தை மட்டும் இழுத்தடித்தது ஏன் என தெரியவில்லை. இவ்வாறு பேசினார்.



பொறியாளர்கள், கவுன்சிலர்கள் இடையேயான கருத்து வேறுபாட்டால் வார்டுகளில் ஜல்லிக்கட்டுக்கு இணையாக மல்லுக்கட்டு நடக்கிறது என மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

தினமலர் செய்தியை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர்

எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா பேசியதாவது: மாநகராட்சி பகுதியில் வணிக, குடியிருப்பு கட்டடங்களுக்கு சொத்து வரி நிர்ணயித்ததில் முரண்பாடு உள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. வசதியானவர்களுக்கு குறைத்தும், ஏழைகளுக்கு அதிகமாகவும் வரி நிர்ணயிக்கப்படுகிறது. முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் 2023ல் முடியும், 2024ல் முடியும் என அமைச்சர்கள் குழப்பமான பதிலை கூறுகிறார்கள். மாநகராட்சி பணிகளை மேற்கொள்ள அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கியது போல் சிறப்பு நிதி வழங்க வேண்டும். சென்னையில் இருந்து 'சூப்பர் சக்சன்' லாரியை வரவழைத்து பெயருக்கு சில இடங்களில் கழிவுநீரை சுத்தம் செய்து விட்டு அனுப்பி விட்டனர். மதுரையில் அதிகம் டெங்கு பரவுவதால் சுற்றுப்புற துாய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மண்டலத்திற்கு தலா ஒரு 'சூப்பர் சக்கர்' லாரி வேண்டும். மாநகராட்சி வருவாய் இனங்களுக்கு மட்டும் விரைந்து ஒப்பந்தம் கோரும் நிலையில் தெருவிளக்கு ஒப்பந்தத்தை மட்டும் இழுத்தடித்தது ஏன் என தெரியவில்லை. இவ்வாறு பேசினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan - madurai ,இந்தியா
25-ஆக-202211:18:28 IST Report Abuse
kumaresan மதுரையில் அதிகம் டெங்கு பரவுவதால் சுற்றுப்புற துாய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மதுரையின் முக்கிய சுற்றுலா பகுதியான மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு அருகில் அமைந்துள்ள பந்தடி முதல் தெருவில் உள்ள பெரிய குப்பை கிடங்கை அகற்ற மறுக்கும் மாநகராட்சி, மஹாலை சுற்றியுள்ள நல்ல சுகாதாரமான குடியிருப்பு பகுதியில் லாரி புக்கிங் கிடடங்கிகளுக்கு அனுமதி அளித்து சுகாதாரத்தை முழுவதுமாக கெடுத்து, இந்த பகுதி முழுவதையும் சிறுநீரகம் கழிக்கும் பொது கழிப்பிடமாக மாற்றி ,இங்கு வசிக்கும் பல குடியிருப்புக்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்லும் அளவிற்கு மதுரை மாநகராட்சி இந்த பகுதி மக்களுக்கு எதிராக மிகவும் கொடூரமான நடந்து கொண்டு வருகிறது ஒரு அருமையான சுற்றுலா தளமும் அதை சுற்றி குடியிருப்பு பகுதி மற்றும் ஒரு பெரிய ஜானகிராம் பார்க் அமைக்கப் பட்டது. பந்தடி முதல் தெருவில் வீடு வீடாக குப்பைகளை வாங்குவதில்லை .குப்பைகளை பிரிப்பதில்லை. பந்தடி முதல் தெருவில் ஒரு மாநகராட்சி பள்ளியும் மருத்துவமனைகளும் குடியிருப்புகளும் உள்ளன. நடுவில் ஒரு பீடி சிகிரெட் கடைக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஏனெனில், இங்கு கூடும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இந்த கடை தேவைபடுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வந்து கண்டுகளிக்கும் ஒரு அருமையான அழகான சுற்றுலா தளத்தை இவர்கள் கையாளும் விதம் கொடூரமானது. தயவு செய்து பந்தடி முதல் தெருவில் அமைந்துள்ள குப்பை கிட்டங்கிகளை அகற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லுங்கள். இந்த தெருவிலும் மஹாலை சுற்றியுள்ள லாரி புக்கிங் கிடங்கிகளையும் ரிங் ரோடு, அவனியாபுரம், சிந்தாமணி ரயில்வே கேட் டிற்கு அப்பால் உள்ள பகுதி களுக்கு கொண்டு செல்லலாம். மஹாலை சுற்றி எப்போதும் லாரிகள் நிற்கும் இடமாக மாறி வருகின்றன. இதனால் மாநகராட்சிக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என்பதை கூட மாநகராட்சி அதிகாரிகள் தெரிந்துகொள்வதில்லை. இந்த இடத்தில அதாவது பந்தடி முதல் தெரு மற்றும் மஹால் சுற்று பகுதிகளில் நம் நாட்டு தமிழ் நாட்டுபாரம்பரியத்து தொடர்புடைய பூம்புகார் மாதிரி எம்போரியம், பட்டு சேலைகள், சுங்கிடி சேலைகள், மதுரை பாரம்பரிய சிற்பங்கள் கலை பொருட்களின் விற்பனை நிலையங்கள் இருக்க வேண்டும். இதனால் மாநகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும் சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும் .அந்த மாதிரி விற்பனை நிலையங்கள் கழிப்பறையுடன் கூடியதாக இருக்க வேண்டும் .மஹால் அருகில் மத்திய அரசின் தொல்பொருள் கலை மற்றும் பண்பாட்டு அலுவலகம் இருப்பது பல விதங்கலில் நன்மை பயக்கும்... மதுரையில் மரங்கள் வெட்டி சாய்ப்பு வேடிக்கை பார்க்கிறது. பந்தடி - மஹால் பசுமைக் குழு சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. இதன் உதவியுடன் மதுரை நகர் பகுதியில் நிறைய மரங்கள் நட பட வேண்டும். இல்லையென்றால் மதுரை மழை இல்லாத நீர் இல்லாத வறண்ட பகுதி ஆகி விடும். மதுரை மஹால் சுற்றி உள்ள பகுதிகள், மாசி, மா ரட்டு மற்றும் வெளி வீதிகள் மரங்கள் நிறைந்த பகுதிகளாக மாற்ற வேண்டும் . இது மதுரையின் அவசர தேவை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X