ஒரு போன் போதுமே..

Added : ஆக 25, 2022 | |
Advertisement
ஒரு போன் போதுமே//* தெருவிளக்கு இருக்கு... ஆனா இல்லைமதுரை தெற்குவாசல் ஆறுமுகஆசாரி சந்தில் ஒருவாரமாக தெரு விளக்கு அடிக்கடி எரிவதில்லை. இரவில் இருள் நிறைந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- கிருஷ்ணமூர்த்தி, தெற்குவாசல்.//* ரோட்டில் ஓடுது கழிவுநீர்விளாங்குடி சூசைநகர் 2வது தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஆறாக ஓடுகிறது.
ஒரு போன் போதுமே..



ஒரு போன் போதுமே

//* தெருவிளக்கு இருக்கு... ஆனா இல்லைமதுரை தெற்குவாசல் ஆறுமுகஆசாரி சந்தில் ஒருவாரமாக தெரு விளக்கு அடிக்கடி எரிவதில்லை. இரவில் இருள் நிறைந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- கிருஷ்ணமூர்த்தி, தெற்குவாசல்.//* ரோட்டில் ஓடுது கழிவுநீர்விளாங்குடி சூசைநகர் 2வது தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஆறாக ஓடுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- மனோகரன், விளாங்குடி.//* தண்ணீர் கிடைக்கலசோழவந்தான் தென்கரை புதுத்தெரு, கோயில் தெருவிற்கு 2 வாரமாக குடிநீர் விநியோகம் இல்லை. புதிய குழாய்கள் இணைப்பு கொடுத்ததால் பழைய குழாய்களில் குடிநீர் வருவதில்லை. இதனால் மக்கள் தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் விரைந்து எடுக்க வேண்டும்.- சர்வேஸ்வரன், தென்கரை.//* குண்டும் குழியுமான ரோடுமதுரை அனுப்பானடி டீச்சர்ஸ் காலனியில் வண்ணாநகர், பாபு நகர் குடியிருப்பில் ரோடு குண்டும் குழியுமாய் இருக்கிறது. மழை பெய்தால் சாலை விபத்து ஏற்படுகிறது. பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.-குமார், அனுப்பானடி.///* சாக்கடையில் ரோடுமதுரை சொக்கிகுளம் தங்கராஜ் தெரு விகாஷ் மகால் ரோட்டில் காய்கறி கழிவுகளை கொட்டுவதால் சாக்கடை கால்வாயில் நிறைந்து புதுார் பஸ் ஸ்டாண்ட் வரை கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.-சரவணன், சொக்கிகுளம்.///*தெரு விளக்கு எரியவில்லைஎஸ்.எஸ். காலனி தாகூர் நகரில் தெருவிளக்கு எரிவதில்லை. தெரு நாய்கள் அதிகம் இருப்பதால் இருட்டில் செல்பவர்களை கடிக்கவும், வாகன ஓட்டிகளால் விபத்தும் ஏற்படுகிறது.-பத்மநாதன், எஸ்.எஸ்.காலனி.////*உபயோகமில்லா கழிப்பறைமதுரை சிம்மக்கல் ராகவேந்திரா கோயில் மேற்கு சுற்றுச்சுவர் அருகில் பல ஆண்டுகளாக உபயோகமற்ற கழிப்பறையால் பொதுமக்களுக்கு சுத்தம் சுகாதாரம் இல்லாத சூழல் நிலவுகிறது.- ஜெயராமன், சிம்மக்கல்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X