விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி விறுவிறு| Dinamalar

விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி 'விறுவிறு'

Added : ஆக 25, 2022 | |
பொன்னேரி:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொன்னேரியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இம்மாதம் 31ல் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இதுவரை, பொன்னேரி -44, மீஞ்சூர்- 67, சோழவரம் -60, திருப்பாலைவனம் -22, காட்டூர் -35 என,
விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி 'விறுவிறு'

பொன்னேரி:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொன்னேரியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இம்மாதம் 31ல் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இதுவரை, பொன்னேரி -44, மீஞ்சூர்- 67, சோழவரம் -60, திருப்பாலைவனம் -22, காட்டூர் -35 என, மொத்தம், 228 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது, அவற்றை பாதுகாப்பாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பாக, காவல்துறையினர் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர்.


பொன்னேரி அடுத்த, மாதவரம், வெள்ளோடை ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இங்கு, பாகுபலி விநாயகர், கல்வெட்டு விநாயகர், கம்பீரமாக காட்சி தரும் ராஜ விநாயகர், தர்பார் விநாயகர், ஆதியோகி சிவன் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கி, அதற்கு அழகிய வர்ணம் தீட்டும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.


இது குறித்து, விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பொன்னேரி பகுதியைச் சேர்ந்த எஸ். சரணவன் தெரிவித்ததாவது:விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கும், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றை பின்பற்றியே மாசு ஏற்படுத்தாத, எளிதில் தண்ணீரில் கரைக்கூடிய சிலைகளை தயாரித்து வருகிறோம்.இதற்காக, கிழங்கு மாவு, தேங்காய் நார் மற்றும் ரசாயன அல்லாத வர்ணங்களை பயன்படுத்துகிறோம்.


விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் இருந்து, இவற்றை கொண்டு வந்து தயாரிக்கிறோம். சிலையின் உயரம், அதன் வேலைப்பாடிற்கு ஏற்ப, 2,000 - 25 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்கிறோம்.தற்போதைக்கு, 200 சிலைகளுக்கு தயாரித்து கொடுக்க முன்பதிவு செய்து உள்ளனர். சிலை தயாரிப்பில் பெரும்பாலான பணிகள் முடிந்து உள்ளன. இறுதி கட்ட வர்ணம் பூசும் பணிகளை மேற்கொண்டு உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X