சித்த மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்கு ஏங்கும் நோயாளிகள்| Dinamalar

சித்த மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்கு ஏங்கும் நோயாளிகள்

Added : ஆக 25, 2022 | |
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சித்த மருத்துவமனையில் பணியாட்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் வருகை குறைகிறது. 'அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும்' என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவு இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் சிறிய கட்டடத்தில் மருத்துவமனை இயங்கியது. பின் 1989 ல் புது கட்டடம்
சித்த மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்கு ஏங்கும் நோயாளிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சித்த மருத்துவமனையில் பணியாட்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் வருகை குறைகிறது. 'அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும்' என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவு இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் சிறிய கட்டடத்தில் மருத்துவமனை இயங்கியது. பின் 1989 ல் புது கட்டடம் கட்டி உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் வசதி மேம்படுத்தப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தினசரி 100க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று அதற்கான மருந்துகள் வாங்கி செல்வர். பின் போதிய மருந்துகள் இருப்பு இல்லை என புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து நோயாளிகள் வருகை குறைந்தது.இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் 25 பேர் தங்கி சிகிச்சை பெற படுக்கை வசதிகள் உள்ளன. நாள்பட்ட பெரு நோய்களுக்கு சித்த மருத்துவம் மூலம் குணமாக்க முடியும் என அத்துறை மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஆங்கில மருத்துவ பிரிவில் உள்ள வசதிகள் சித்த பிரிவில் கிடையாது. அதற்கான நிதி இல்லாமல் நாளுக்கு நாள் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இம் மருத்துவமனையில் சித்த மருத்துவர் ஒருவர் மட்டும் உள்ளார். அவர் விடுப்பில் சென்று விட்டால் மருந்து மட்டும் வழங்கப்படும். மருத்துவமனையில் துாய்மை பணியாளர் இல்லை. ஆண் செவிலியர் உதவியாளர் கிடையாது. செவிலியர் மூவர் உள்ளனர். அதில் ஒருவர் விடுப்பு என்றால் மற்றொருவர் கூடுதல் பணி செய்ய வேண்டும்.உடலில் உள்ள பல்வேறு நோய்களை தீர்ப்பதற்கு சித்த மருந்துகளால் நீராவி குளியல் சிகிச்சை முறை இருந்தது

10 ஆண்டுகளுக்கு முன் அதன் இயந்திரம் பழுதாகி பயனற்று உள்ளது.இது குறித்து சித்த மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகள் கூறியதாவது:சித்த மருத்துவம் மூலம் தீராத நோய்களை தீர்க்க முடியும் என்று அந்த காலத்தில் நிரூபித்துள்ளனர். அதற்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை. போதிய மருந்தும் கிடையாது. பணியாட்களும் கிடையாது. இதனால் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற யாரும் விரும்ப வில்லை. ஒரு சிலர் மட்டும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

வசதிகள் ஏற்படுத்தியிருந்தால் மருத்துவமனையில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். தரமான சிகிச்சை அதற்கான மருந்துகள் இருந்தால் நோயாளிகள் வருகை அதிகரிக்கத்தான் செய்யும். அதற்கான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X