எங்கே போகிறது தமிழகம்: பழனிசாமி கேள்வி

Added : ஆக 25, 2022 | |
Advertisement
சென்னை:'கடந்த 36 மணி நேரத்தில், 15 கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. எங்கே போகிறது தமிழகம்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:குற்றங்களை தடுப்பதில், நிர்வாகத் திறமையற்ற முதல்வர், விளம்பர மோகத்தில் திளைத்துள்ளதால், தமிழகம் முழுதும் கொலைக் களமாக மாறி வருகிறது. கடந்த 36 மணி நேரத்தில், 15 படுகொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இவை, மக்களை குலை

சென்னை:'கடந்த 36 மணி நேரத்தில், 15 கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. எங்கே போகிறது தமிழகம்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:குற்றங்களை தடுப்பதில், நிர்வாகத் திறமையற்ற முதல்வர், விளம்பர மோகத்தில் திளைத்துள்ளதால், தமிழகம் முழுதும் கொலைக் களமாக மாறி வருகிறது. கடந்த 36 மணி நேரத்தில், 15 படுகொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இவை, மக்களை குலை நடுங்கச் செய்துள்ளன. இந்த கொலைகள் அனைத்தும், ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்ததாக தெரியவில்லை; முன் விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இக்கொலைகள் நடந்துள்ளன.

கொல்லப்பட்ட ஒரு சிலர், தங்கள் உயிருக்கு ஆபத்து எனப் புகார் கொடுத்தும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், காவல் துறையினர் அலட்சியமாக இருந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

'சட்டம் - ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன்' என, முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூறினார். இதுதான், அவர் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா?. இந்த படுகொலை சம்பவங்களுக்கு, காவல் துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக காவல் துறை, ஸ்காட்லாந்து காவல் துறைக்கு ஈடு இணையாக பேசப்பட்ட காலம் மாறி, இன்று சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாமல், திறமையற்றதாக மாறியுள்ளது. இனியாவது தி.மு.க., அரசு விழித்து, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X