மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை

Added : ஆக 25, 2022 | |
Advertisement
சென்னை:மும்முனை இணைப்புக்கு லஞ்சம் கேட்ட மின் வாரிய ஊழியருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில், 2012ல் வணிக ஆய்வாளராக இருந்தவர் குணசேகரன், 35. இவரிடம், புதுப்பிக்கப்பட்ட வீட்டுக்கு மும்முனை வணிக மின் இணைப்பு வழங்க அணுகிய நபரிடம், லஞ்சமாக10 ஆயிரம் ரூபாய்

சென்னை:மும்முனை இணைப்புக்கு லஞ்சம் கேட்ட மின் வாரிய ஊழியருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில், 2012ல் வணிக ஆய்வாளராக இருந்தவர் குணசேகரன், 35. இவரிடம், புதுப்பிக்கப்பட்ட வீட்டுக்கு மும்முனை வணிக மின் இணைப்பு வழங்க அணுகிய நபரிடம், லஞ்சமாக10 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில் அளித்த புகாரின்படி, லஞ்சம் கேட்ட குணசேகரனை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஓம்பிரகாஷ் விசாரித்து, மின் வாரிய ஊழியர் குணசேகரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ௨,௦௦௦ ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X