கோவையில் ரூ.44 கோடி வளர்ச்சிப்பணிகள் முடக்கம்:18 சதவீதம் கமிஷனால் கான்ட்ராக்டர்கள் அதிருப்தி

Added : ஆக 25, 2022 | |
Advertisement
கோவை மாவட்டத்தில், 18 சதவீத கமிஷன் கேட்பதன் காரணமாக, கான்ட்ராக்டர்கள் டெண்டர் எடுக்க மறுப்பதால், 133 வளர்ச்சிப்பணிகள் முடக்கமடைந்துள்ளன.கோவை மாவட்டத்தில், 12 பஞ்சாயத்து யூனியன்களின்கீழ், 227 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், இந்த கிராமங்களில் செயல்படுத்தப்படுகின்றன.சமீப காலமாக கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி

கோவை மாவட்டத்தில், 18 சதவீத கமிஷன் கேட்பதன் காரணமாக, கான்ட்ராக்டர்கள் டெண்டர் எடுக்க மறுப்பதால், 133 வளர்ச்சிப்பணிகள் முடக்கமடைந்துள்ளன.

கோவை மாவட்டத்தில், 12 பஞ்சாயத்து யூனியன்களின்கீழ், 227 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், இந்த கிராமங்களில் செயல்படுத்தப்படுகின்றன.சமீப காலமாக கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால், இத்திட்டங்களில் வளர்ச்சிப் பணிகளுக்கு விடப்படும் டெண்டரை எந்த கான்ட்ராக்டரும் எடுக்க முன்வராததால், பணிகள் முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது, பல்வேறு திட்டங்களில் மொத்தம், 133 வளர்ச்சிப் பணிகள் முடக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உதாரணமாக, எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில், பில்லுார் அணையை ஒட்டிய வனப்பகுதியிலுள்ள பழங்குடியின கிராம மக்கள் பயனடையும் வகையில், 3 கோடியே 48 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு, காரமடை கெம்பராம்பாளையம் கிராமத்துக்கு இரண்டு பிரிவாக சாலைகள் போடுவதற்கு, ஏழு முறை டெண்டர் விடப்பட்டும் யாரும் எடுக்கவில்லை.அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தில், கிராமங்களின் வீதிகளில் கான்கிரீட் சாலை போடுவது, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆனால், கோவை மாவட்டத்தில், 12 கோடியே 64 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான, 80 பணிகளுக்கு, 11 முறை டெண்டர் விடப்பட்டும் எந்த கான்ட்ராக்டரும் முன்வரவில்லை.இதே திட்டத்தில் விலக்குப் பெற்று, மாற்றுப்பணிகள் செய்வதற்கு, 3 கோடியே 47 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 13 பணிகளை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.அந்தப் பணிகளுக்கான டெண்டரும் பலமுறை விடப்பட்டும், யாரும் எடுக்கவில்லை.

பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை யூனியன்களில், 10 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான நான்கு பணிகளுக்கு, நான்கு முறை டெண்டர் விட்டும் பயனில்லை.இவ்வாறு, கோவை மாவட்டத்தில் மட்டும், 43 கோடியே 82 லட்சத்து, 8,200 ரூபாய் மதிப்பில், 133 வளர்ச்சிப் பணிகள், பல மாதங்களாக முடங்கிக் கிடக்கின்றன.

இதுகுறித்து, கான்ட்ராக்டர்கள் கூறியதாவது:தமிழகத்தில் எந்த மாவட்டமாக இருந்தாலும், ஊரக வளர்ச்சி முகமைப் பணிகளை டெண்டர் எடுத்தால், 6 முதல், 7 சதவீதம் வரை கமிஷன் கொடுத்தாக வேண்டும். ஆனால், எங்கேயும் இல்லாத வகையில், கோவையில் இப்போது, 18 சதவீதம் கமிஷன் கேட்கின்றனர். ஆளும்கட்சிக்கு அவ்வளவு கொடுத்தால், அதிகாரிகளுக்கு தனியாகத் தரவேண்டும்.எல்லாம் கொடுத்தது போக, மீதமுள்ள தொகையில், தரமாகப் பணிகளை மேற்கொள்ள முடியாது; மத்திய அரசின் திட்டம் என்பதால், பணியில் தரமில்லாவிட்டால், பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதனால் இந்த பிரச்னையே வேண்டாமென்று, எந்தக் கான்ட்ராக்டரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. இதற்கு பயந்தே, செயற்பொறியாளர் விடுப்பில் சென்று விட்டார்.பிரபல கியர்ஸ் நிறுவனம், மதுக்கரையை சேர்ந்த ஒரு நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்கள், பணிகளின் தரத்துக்காக 10 சதவீதத்துக்கு மேல் கமிஷன் கொடுக்க முன் வரமாட்டார்கள்.

இப்போது, 18 சதவீதம் கேட்பதால், அவர்களும் பணிகளை எடுக்க தயாராக இல்லை. இதனால் வளர்ச்சிப் பணிகள் பல மாதங்களாக முடங்கியுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.கோவையில் இன்று பல திட்டங்களைத் துவக்கி, நலத்திட்ட உதவிகளையும் வழங்க வந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், இதையும் கொஞ்சம் கவனித்தால் நல்லது!

பணிகள் துவங்கும்!கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதாவிடம் கேட்டபோது, ''அது போன்று எந்தப் புகாரும் இல்லை. எல்லாமே 'பிராசஸ்' ஆகிக்கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி., அதிகரித்திருப்பதால், தொகையை உயர்த்தித்தருமாறு கேட்டிருக்கின்றனர்.''அதற்கான பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். திட்ட மதிப்பீட்டில், 18 சதவீதம் கமிஷன் கேட்பதாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. விரைவில் எல்லாப் பணிகளுக்கும் டெண்டர் இறுதி செய்யப்பட்டு, பணிகள் துவங்கும்,'' என்றார்.-நமது சிறப்பு நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X