தென்னை விவசாயிகளின் கண்ணீர் கரையட்டும்!

Added : ஆக 25, 2022 | |
Advertisement
தென்னை மரங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவு நுகர்வு அதிகரிக்கவில்லை. இதனால், முன் எப்போதும் இல்லாத அளவு கொப்பரை விலை சரிந்து விட்டது. ஒரு கிலோ, 77 ரூபாய்க்கு விற்பனையாகிறது.தேங்காய் விலை மிகவும் குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு போதுமான வருவாய் கிடைக்கவில்லை.தென்னை விவசாயிகள் கூறியதாவது:நம் நாட்டில், 60 சதவீத சமையல் எண்ணெய் தேவை, பிற நாடுகளில் இருந்து இறக்குமதி



தென்னை மரங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவு நுகர்வு அதிகரிக்கவில்லை. இதனால், முன் எப்போதும் இல்லாத அளவு கொப்பரை விலை சரிந்து விட்டது. ஒரு கிலோ, 77 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தேங்காய் விலை மிகவும் குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு போதுமான வருவாய் கிடைக்கவில்லை.தென்னை விவசாயிகள் கூறியதாவது:நம் நாட்டில், 60 சதவீத சமையல் எண்ணெய் தேவை, பிற நாடுகளில் இருந்து இறக்குமதி மூலமே ஈடுகட்டப்படுகிறது. தேங்காய் எண்ணெய் நுகர்வை அதிகரித்தால் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் அளவு குறையும். இதனால், அன்னிய செலாவணியும் மீதமாவதோடு, விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும்.கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்தால் ஏழைகளின் எண்ணிக்கை மிகவும் குறையும்.

இதற்கு அரசு தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். அரசு ரேஷன் கடை மற்றும் சத்துணவு கூடங்களுக்கு பாமாயில் சப்ளை செய்கிறது. இதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கினால் தேங்காய் எண்ணெயின் நுகர்வு கணிசமாக உயரும்.மக்கள் பயன்படுத்த துவங்கி விட்டால் தொடர்ந்து தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவர். இதனால், தேங்காய் எண்ணெய் நுகர்வு பெருமளவு அதிகரிக்கும். இது தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X