வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாகப்பட்டினம்--நாகையில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், பங்கேற்ற 500 கர்ப்பிணியருக்கும் சீர்வரிசை பொருட்களை வழங்கி, கலெக்டர் ஆசீர்வதித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
![]() |
500 பெண்களுக்கும் தனித் தனியாக, டி. ஆர். ஓ., ஷகிலா மற்றும் சமூக நலத்துறை அலுவலர் தமிமுன் நிஷா ஆகியோரை வளையல்கள் அணிவிக்க செய்து, சந்தனம் பூச செய்தார்.பின், அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி, மலர் துாவி ஆசீர்வதித்தார். தொடர்ந்து அனைவருக்கும் ஐந்து வகையான உணவு பரிமாறினார். அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளை கேட்டறிந்து கலெக்டர் பரிமாறினார்.
அப்போது, பெரும்பாலான கர்ப்பிணி தாய்மார்களின் கண்கள் கலங்கியிருந்தன.கர்ப்பிணியர் கூறுகையில், 'வழக்கமாக மேடை நிகழ்ச்சியாக நடத்தப்படும் இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்கள், மைக்கில் வாழ்த்தி விட்டு, சிலருக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி விட்டு செல்வர்.
![]()
|
'ஆனால் சம்பிரதாய முறைப்படி, எங்களின் சகோதரனாக கலெக்டரே, ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக வளைகாப்பு நடத்தி, சீர்வரிசை வழங்கி, பாசத்துடன் உணவு பரிமாறியது வாழ்க்கையில் மறக்க முடியாதது.'கலெக்டர் வழங்கியதை எங்கள் தாய் வீட்டு சீதனமாக கருதுகிறோம். எங்களுக்கு சகோதரனாக, நாங்கள் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமனாக கலெக்டர் காட்டிய அன்பு, எங்களின் கண்களை குளமாக்கி விட்டது' என்றனர்.