இருளில் ஒளிராத பூஞ்சோலை!| Dinamalar

இருளில் ஒளிராத பூஞ்சோலை!

Added : ஆக 25, 2022 | |
இரவு 10:00க்கு பின்னும்... இடுவம்பாளையம் டாஸ்மாக் கடையில் எண் 2328), இரவு, 10:00 மணிக்கு பின்னரும் மது விற்பனை நடக்கிறது. கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடுக்க வேண்டும்.- முருகேசன், இடுவம்பாளையம்.உயிரிழப்பு அபாயம்திருப்பூர் மங்கலம் ரோடு, செங்குந்தபுரம் பத்தாவது வீதியில் ரோட்டோரத்தில் பிளாஸ்டிக், குப்பை கழிவு கொட்டப்படுகிறது. இவற்றை
இருளில் ஒளிராத பூஞ்சோலை!


இரவு 10:00க்கு பின்னும்...



இடுவம்பாளையம் டாஸ்மாக் கடையில் எண் 2328), இரவு, 10:00 மணிக்கு பின்னரும் மது விற்பனை நடக்கிறது. கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடுக்க வேண்டும்.- முருகேசன், இடுவம்பாளையம்.உயிரிழப்பு அபாயம்திருப்பூர் மங்கலம் ரோடு, செங்குந்தபுரம் பத்தாவது வீதியில் ரோட்டோரத்தில் பிளாஸ்டிக், குப்பை கழிவு கொட்டப்படுகிறது.



இவற்றை கால்நடைகள் சாப்பிட வருவதால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும்.- இளையராஜா, செங்குந்தபுரம். (படம் உண்டு)தெருவிளக்கு இல்லைதிருப்பூர், 47வது வார்டு, காட்டுப்பாளையம், பூஞ்சோலை நகர் மூன்று வீதிகளுக்கு மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது. மின்விளக்கு பொருத்தவில்லை. சமூக விரோத செயல்கள் நடப்பதால், தெருவிளக்கு பொருத்த வேண்டியது அவசியம்.- சையத் சலாவுதீன், பூஞ்சோலை நகர். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், என்.ஆர்.கே., புரம் ரோடு, மேட்டங்காடு வளைவில், தண்ணீர் திறக்கும் கேட்வால்வு பழுதாகி, 24 மணி நேரம் தண்ணர் வீணாகிறது. சரிசெய்ய வேண்டும்.- சங்கர் சதீஷ், மேட்டங்காடு.




போக்குவரத்து நெரிசல்



திருப்பூர் பிஷப் ஸ்கூல் பின்புறம் அங்கேரிபாளையம் ரோட்டில் பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும் பெற்றோரின் வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- செந்தில்குமார், அங்கேரிபாளையம். (படம் உண்டு)சாலை நடுவில் குழிஅவிநாசி, கால்நடை மருத்துவமனை எதிரில் சாலை நடுவே குழி உள்ளது. அருகில் வந்த பின் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.- செந்தில்குமார், அவிநாசி.




சரிவர மூடாத குழி



திருப்பூர், 17வது வார்டு, டி.என்.கே., புரம் மெயின் ரோடு, நால்ரோடு சந்திப்பில் குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்ய தோண்டி குழி, பணி முடிந்து சரிவர மூடவில்லை. தினசரி நெரிசல் ஏற்படுகிறது.- ரஞ்சித்குமார், டி.என்.கே., புரம். (படம் உண்டு)சாலையில் கொட்டுவதா?திருப்பூர், 12வது வார்டு, 15 வேலம்பாளையம், அம்மையப்பன் நகர் மெயின் ரோட்டில் இருந்த குப்பை தொட்டியை மாநகராட்சி ஊழியர் எடுத்துச் சென்று விட்டனர். ரோட்டில் குப்பை கொட்டப்படுகிறது. இப்பகுதியில் மீண்டும் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.- தனபாலன், வேலம்பாளையம்.



ரியாக் ஷன் சுத்தமானது கால்வாய்



திருப்பூர், புதுார் மெயின் ரோடு, புதுக்காடு முதல் வீதியில் கால்வாய் அடைப்பு குறித்து 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மாநகராட்சி ஊழியர்கள் கால்வாயை சுத்தம் செய்து விட்டனர். 'தின மலர்' நாளிதழுக்கு நன்றி.-மகேஷ்வரன், புதுக்காடு. (படம் உண்டு)சாலை சீரமைப்பு துவக்கம்திருப்பூர், தென்னம்பாளையம், ஆர்.வி.இ., லே-அவுட்டில் சேறும், சகதியுமாக இருந்த சாலையை சீரமைக்க மண் கொட்டப்பட்டுள்ளது. 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.- விஷ்ணுபிரசாத், ஆர்.வி.இ., லே-அவுட்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X