தக்காளி விலை கடும் சரிவு விவசாயிகள் வாட்டம்| Dinamalar

தக்காளி விலை கடும் சரிவு விவசாயிகள் வாட்டம்

Added : ஆக 25, 2022 | |
பல்லடம் : பல்லடம் வட்டாரத்தில், தக்காளி, வெங்காயம், வெண்டை, புடலை, பாகற்காய், கத்தரி உள்ளிட்ட பல்வேறு தோட்ட பயிர்கள், பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இல்லத்தரசிகள் பயன்படுத்தும் காய்கறிகளில், தக்காளி, வெங்காயம் ஆகியவை பிரதான இடம் வகிக்கின்றன.இதற்கேற்றவாறு, பல்லடம் வட்டாரத்தில் தக்காளி, வெங்காயம் அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. ஆனால், இவற்றின் கொள்முதல்
தக்காளி விலை கடும் சரிவு  விவசாயிகள் வாட்டம்



பல்லடம் : பல்லடம் வட்டாரத்தில், தக்காளி, வெங்காயம், வெண்டை, புடலை, பாகற்காய், கத்தரி உள்ளிட்ட பல்வேறு தோட்ட பயிர்கள், பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இல்லத்தரசிகள் பயன்படுத்தும் காய்கறிகளில், தக்காளி, வெங்காயம் ஆகியவை பிரதான இடம் வகிக்கின்றன.இதற்கேற்றவாறு, பல்லடம் வட்டாரத்தில் தக்காளி, வெங்காயம் அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன.



ஆனால், இவற்றின் கொள்முதல் விலையில் ஏற்படும் மாற்றங்கள், விவசாயிகளை கவலை அடைய செய்கின்றனர்.விலை உச்சத்தில் செல்வதை காட்டிலும், பெரும்பாலும் சரிவை சந்திப்பதே அதிகம். இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு, விளைவித்த காய்கறிகளை ரோட்டில் கொட்டுவதும், செடிகளிலேயே பறிக்காமல் விடுவதுமான செயல்களில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.சமீப நாட்களாக, 14 கிலோ கொண்ட தக்காளி டிப்பர் ஒன்றின் விலை, 90 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



விலை சரிவு காரணமாக, பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், தக்காளிகளை ரோட்டிலேயே கொட்டி செல்வது வாடிக்கையாகி விட்டது.விலை அதிகரித்தால் மட்டுமே, இதற்கு தீர்வு கிடைக்கும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X