தனியாரிடம் நாற்று 40 பைசா; அரசிடம் 1 ரூபாய் வீணடிக்கப்படும் மானியம்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 312 எக்டர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்ய, ஒரு எக்டருக்கு தலா, 20 ஆயிரம் ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு நாற்று ஒரு ரூபாய் வீதம், 15 ஆயிரம் நாற்றுகளும் ஐந்து ஆயிரம் ரூபாய்க்கு உரங்களும் வழங்கப்படுகிறது.'சுண்டக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்'



காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 312 எக்டர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்ய, ஒரு எக்டருக்கு தலா, 20 ஆயிரம் ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு நாற்று ஒரு ரூபாய் வீதம், 15 ஆயிரம் நாற்றுகளும் ஐந்து ஆயிரம் ரூபாய்க்கு உரங்களும் வழங்கப்படுகிறது.

'சுண்டக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்' என்பது யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ, அரசு தக்காளி சாகுபடிக்கு வழங்கும் மானியத்திற்கு, 100 சதவீதம் பொருந்துகிறது.தனியார் நாற்று பண்ணைகளில் ஒரு நாற்று, 40 பைசாவுக்கு கிடைக்கிறது. ஆனால், அரசு நாற்று பண்ணையில் ஒரு நாற்று ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவும் மடத்துக்குளம் சங்கரராமநல்லுார் அரசு பண்ணையில் மட்டுமே வாங்க வேண்டும். வாடகை செலவை விவசாயிகளே ஏற்க வேண்டும்.விவசாயிகள் கூறியதாவது:பெரும்பாலான விவசாயிகள் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் மட்டுமே தக்காளி சாகுபடி செய்கின்றனர்.

அரை ஏக்கர் சாகுபடி செய்யும் விவசாயிக்கு மூன்று ஆயிரம் நாற்று போதுமானது. இதற்கு, 2 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும்.ஏக்கருக்கு நாற்று வாங்க, 5 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. வெளியில் வாங்கினால், 1,200 ரூபாய்க்கு வாங்கி விடலாம். அருகிலேயே தனியார் நாற்று பண்ணை இருப்பதால் வாடகை செலவும் இல்லை. மானியம் என்ற பெயரில் அரசு பணத்தை வீணடிக்கிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் பெரும்பாலான மானியங்களின் நிலையும் இதுதான்.அரசு உண்மையிலேயே மானியம் வழங்க விரும்பினால், பின்னேற்பு மானியமாக விவசாயிகள் வங்கி கணக்கில் வழங்க வேண்டும்.

நாற்று வாங்க சுதந்திரம் வழங்க வேண்டும். அரசு பண்ணையில் வாங்கினால் பெரும் நஷ்டம் தான் மிஞ்சும். மானியம் வழங்கும் முன் விவசாயிகளிடம் கலந்தாலோசித்து மானிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X