நிட்டிங் பொது பயன்பாட்டு மையம் இன்று திறப்பு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
திருப்பூர் : பல்லடம் நாரணாபுரத்தில், 15.35 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.நிட்டிங் துறையை வளர்ச்சி பெறச் செய்வதற்காக, தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடைத் துணி உற்பத்தியாளர் சங்கம் (சிம்கா), பல்லடம் அருகே நாரணாபுரத்தில், பொது பயன்பாட்டு சேவை மையத்தை உருவாக்கியுள்ளது. 40 நிட்டிங்
நிட்டிங் பொது பயன்பாட்டு மையம் இன்று திறப்பு


திருப்பூர் : பல்லடம் நாரணாபுரத்தில், 15.35 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.நிட்டிங் துறையை வளர்ச்சி பெறச் செய்வதற்காக, தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடைத் துணி உற்பத்தியாளர் சங்கம் (சிம்கா), பல்லடம் அருகே நாரணாபுரத்தில், பொது பயன்பாட்டு சேவை மையத்தை உருவாக்கியுள்ளது.

40 நிட்டிங் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, 15.35 கோடி ரூபாய் மதிப்பில், 26 ஆயிரம் சதுர அடியில், நிட்டிங் மெஷின் கூடம், திறன் பயிற்சி மையம், ஒர்க்ஷாப், அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் மையத்தை உருவாக்கியுள்ளன.இம்மையத்துக்கு, மத்திய அரசு, 8.35 கோடி ரூபாய்; தமிழக அரசு 3 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளன. நிட்டிங் துறையினர், 4 கோடிரூபாய் முதலீடு செய்துள்ளனர்.தைவான், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய காலர் நிட்டிங், சர்குலர் நிட்டிங் மெஷின்கள் தருவிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன.திருமுருகன்பூண்டியில் இன்று நடைபெறும் 'தொழிலுக்கு தோள் கொடுப்போம்' மாநாட்டில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், திருப்பூரின் முதல் நிட்டிங் பொது பயன்பாட்டு சேவை மையத்தை திறந்து வைக்கிறார்.'சிம்கா' தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தால், நிட்டிங் துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தி துறையும் வளர்ச்சி பெறும். தொழிலாளர்களுக்கு இம்மையத்தில் திறன் பயிற்சி அளித்து, நிட்டிங் நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவர்.

இதனால், பின்னலாடை துணி தயாரிப்பில் தவறுகள் குறையும், உற்பத்தியும், தரமும் உயரும். திருப்பூரில் இதுவரை இல்லாத அதிநவீன நிட்டிங் மெஷின்களெல்லாம் நிறுவப்பட்டுள்ளன.மேட்ரெஸ், டெனீம், புள்பாடி கார்மென்ட் என, புதுமையான டிசைன்களில் பின்னலாடை ரகங்கள் தயாரிப்புக்கு இந்த மெஷின்கள் கைகொடுக்கும்.சிங்கிள் கேம் செமி ஜக்கார்டு மெஷின்களில், பிளைன் காலர், ஜக்கார்டு, ஸ்வெட்டர் டிசைன்கள், பேஷன் ஆடை ரகங்கள் தயாரிக்கலாம்.

புள் ஜக்கார்டு மெஷின்களில், அதிக எடையுள்ள ஆடைகள், ஜக்கார்டு பிளேட்டிங், ஷூக்களின் மேற்பகுதி தயாரிக்கலாம். கை, கால், உடல், பேனல் என ஆடையின் அனைத்து பாகங்களையும் இந்த மெஷின் தயாரித்துக்கொடுத்துவிடும்; பாகங்களை இணைத்தாலே போதும், முழு ஆடையாகிவிடும்.திருப்பூரில் உள்ள பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்பில் ஈடுபட, பொது பயன்பாட்டு மையம் கைகொடுக்கும். இதனால், நிர்ணயிக்கப்பட்டுள்ள லட்சம் கோடி வர்த்தக இலக்கை எட்டுவது எளிதாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X