பைக் - லாரி மோதல் பலி இரண்டு ஆனது

Added : ஆக 25, 2022 | |
Advertisement
போத்தனூர் : கோவை -- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், குறிச்சி அருகே பொங்காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை, சுந்தராபுரம் நோக்கி வந்த பைக் மீது, டிப்பர் லாரி மோதியது.தொடர்ந்து பைக், சாலை ஓரத்திலிருந்த மரத்தில் மோதியது. பைக்கில் வந்த மலுமிச்சம்பட்டியிலுள்ள தனியார் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் விஷ்ணு, விக்னேஷ், சதீஷ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.கோவை அரசு



போத்தனூர் : கோவை -- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், குறிச்சி அருகே பொங்காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை, சுந்தராபுரம் நோக்கி வந்த பைக் மீது, டிப்பர் லாரி மோதியது.தொடர்ந்து பைக், சாலை ஓரத்திலிருந்த மரத்தில் மோதியது. பைக்கில் வந்த மலுமிச்சம்பட்டியிலுள்ள தனியார் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் விஷ்ணு, விக்னேஷ், சதீஷ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், சிகிச்சை பலனின்றி விஷ்ணு உயிரிழந்தார். நேற்று காலை விக்னேஷும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. சதீஷ்வரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சரோஜா விசாரிக்கிறார்.

மற்றொரு விபத்து
வால்பாறை முடீஸ் கஜமுடியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், 31. இவர், சத்தி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் சென்ற அரசு போக்குவரத்துக்கழக பஸ், பைக் மீது மோதியது. தடுமாறி விழுந்த வெங்கடேஸ்வரன் மீது, பஸ் டயர் ஏறி நசுக்கியதில் அதே இடத்தில் பலியானார். சம்பவம் பற்றி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் விசாரிக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X