ரயில்வே தடுப்பில் வேன் மோதல் போக்குவரத்து பாதிப்பு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம் : வீரபாண்டி ரயில்வே தடுப்பில் வேன் மோதியதில், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி, வேட்டைக்காரன் சுவாமி கோவில் அருகே, 20 அடி உயரம் உள்ள ரயில்வே தடுப்பு உள்ளது. இதில், உயரமான லோடு ஏற்றிய லாரிகள் செல்ல முடியாது. பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே சென்றுவர முடியும். நேற்று முன்தினம், அந்த வழியாக கர்நாடகாவை



பெ.நா.பாளையம் : வீரபாண்டி ரயில்வே தடுப்பில் வேன் மோதியதில், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி, வேட்டைக்காரன் சுவாமி கோவில் அருகே, 20 அடி உயரம் உள்ள ரயில்வே தடுப்பு உள்ளது.

இதில், உயரமான லோடு ஏற்றிய லாரிகள் செல்ல முடியாது. பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே சென்றுவர முடியும். நேற்று முன்தினம், அந்த வழியாக கர்நாடகாவை சேர்ந்த டெம்போ ஒன்று, ரயில்வே பாலம் அருகே போட்டிருந்த உயரத் தடுப்பில் மோதியது.இதனால், உயரத்தடுப்பின் இரும்பு சட்டம் பெயர்ந்து, டெம்போ மீது விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் உயிர் தப்பினர். தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கிய டெம்போவை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X