ஆவணி மாத பிரதோஷ பூஜை

Added : ஆக 25, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் நேற்று, பிரதோஷ வழிபாடு நடந்தது. கோவிலில் சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று மாலை ஆவணி மாத முதல் பிரதோஷ பூஜை நடந்தது. பூஜையில், மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன்,
ஆவணி மாத பிரதோஷ பூஜை



பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் நேற்று, பிரதோஷ வழிபாடு நடந்தது. கோவிலில் சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள

காசிவிஸ்வநாதருக்கு, நேற்று மாலை ஆவணி மாத முதல் பிரதோஷ பூஜை நடந்தது. பூஜையில், மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை, 6:15 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.அதன்பின், காசிவிஸ்வநாதர் தேவியருடன் தேரில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று, பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தன. நந்திபகவானுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.இதே போல், பிரசன்ன விநாயகர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன.

- நிருபர் குழு -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X