புனே இளைஞரை சந்தித்த டெஸ்லா சி.இ.ஓ.,எலான் மஸ்க்

Added : ஆக 25, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புனே : “டெஸ்லா நிறுவனத்தில் என் தகுதியை மதித்து வேலை தர வேண்டும்; அதன் சி.இ.ஓ., எலான் மஸ்க் என்னை நேர்காணல் செய்தால் நன்றாக இருக்கும்,” என, சமூக வலைதளத்தில் அடிக்கடி மஸ்க்குடன் அரட்டை அடிக்கும் புனே நகரை சேர்ந்த இளைஞர் கூறினார்.மஹாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்தவர் பிரனாய் பத்தோல்,23. மென்பொருள் பொறியாளரான இவர் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு,
Elon Musk, Tesla, Twitter friend, Pranay Pathole, Pune techie

புனே : “டெஸ்லா நிறுவனத்தில் என் தகுதியை மதித்து வேலை தர வேண்டும்; அதன் சி.இ.ஓ., எலான் மஸ்க் என்னை நேர்காணல் செய்தால் நன்றாக இருக்கும்,” என, சமூக வலைதளத்தில் அடிக்கடி மஸ்க்குடன் அரட்டை அடிக்கும் புனே நகரை சேர்ந்த இளைஞர் கூறினார்.

மஹாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்தவர் பிரனாய் பத்தோல்,23. மென்பொருள் பொறியாளரான இவர் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு, டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்குடன் 2018ல் சமூக வலைதளத்தில் நட்பு ஏற்பட்டது.

அப்போது டெஸ்லா காரின் 'வைப்பரில்' உள்ள தவறு குறித்து, சமூக வலைதளத்தில் மஸ்க்குக்கு சுட்டிக்காட்டினார். அதற்கு உடனடியாக பதிலளித்த மஸ்க், தவறு உடனே திருத்தப்படும் என கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சமூக வலைதளத்தில் அரட்டை அடித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரனாய் பத்தோல், டெஸ்லா நிறுவனத்தில் எலான் மஸ்க்கை சந்தித்துள்ளார். அந்த போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதை ஏராளமானோர் பகிர்ந்து எலான் மஸ்க்கை புகழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து, பத்தோல் கூறியதாவது:எலான் மஸ்க் நிறுவனத்தில் என் தகுதியை மதித்து எனக்கு வேலை வேண்டும் என விரும்புகிறேன். மஸ்க்குடன் தொடர்பில் இருப்பதால் சலுகைகளை எதிர்பார்க்கவில்லை. மேலும், அவரே என்னை நேர்காணல் செய்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.எ

லான் மஸ்க்கை சமூக வலைதளத்தில் 10.3 கோடி பேர் தொடர்கின்றனர். அதில் நம் நாட்டின் இளம்பொறியாளருடன் நட்பு பாராட்டி அவருடைய கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-202215:48:55 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் தனது திறமை மீது நம்பிக்கை இருந்தால் நேரடியாக வலைத்தளத்தின் மூலம் (நட்பை காட்டிக்கொள்ளாமல்) அப்ளை செய்திருப்பார்.. நண்பர் என்கிற முறையில் உதவியை எதிர்பார்பதால் நட்பை காட்டி வேலை கேட்கிறார் .....
Rate this:
Cancel
25-ஆக-202215:45:05 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் என்ன ஒரு அடிமைத்தனம் ......
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
25-ஆக-202209:00:54 IST Report Abuse
Fastrack பொதுவாக அம்மணிகள் மீது தான் கரிசனம் காட்டுவார் ..
Rate this:
25-ஆக-202215:49:17 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்அப்படியா ? உங்களுக்கு எப்படி தெரியும் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X