எழுதுவதா, பாடம் நடத்துவதா?ஆசிரியை கண்ணீர் வீடியோ| Dinamalar

எழுதுவதா, பாடம் நடத்துவதா?ஆசிரியை கண்ணீர் 'வீடியோ'

Added : ஆக 25, 2022 | கருத்துகள் (25) | |
பல்லடம் : 'நான் எழுதுவதா, வீட்டு வேலை செய்வதா, பாடம் நடத்துவதா' என, ஆசிரியை அழுது புலம்பும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, கல்வி முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பள்ளி மேலாண்மை குழு பணி, 'எமிஸ்' இணையதள பதிவுகள் என, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பணிச்சுமை நாளுக்கு நாள்
எழுதுவதா, பாடம் நடத்துவதா?ஆசிரியை கண்ணீர் 'வீடியோ'

பல்லடம் : 'நான் எழுதுவதா, வீட்டு வேலை செய்வதா, பாடம் நடத்துவதா' என, ஆசிரியை அழுது புலம்பும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, கல்வி முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பள்ளி மேலாண்மை குழு பணி, 'எமிஸ்' இணையதள பதிவுகள் என, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.



'மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவதை மறந்து, மொபைல் போனும், இணைய தளமுமாக பணியாற்ற வேண்டியுள்ளது' என்று, ஆசிரியர்கள் புலம்புகின்றனர். அதன்படி, அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், கண்ணீர் மல்க பேசிய வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.



அதில் அவர் கூறுவதாவது: இன்று ஞாயிற்றுக்கிழமை. நான் எழுதுவதா, நாளை பள்ளி செல்வதற்கு தயார்படுத்துவதா, சமையல் செய்வதா, அம்மாவை கவனிப்பதா, இந்த வாரத்தின் துணிகளை துவைப்பதா? நாளை, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். என்ன செய்வது என்றே தெரியவில்லை.இவ்வாறு, கண்ணீர் விட்டு அழுதபடி, தன் மொபைல் போனில் 'செல்பி' எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.



இதை, பல்வேறு சமூக வலைதளக் குழுக்களிலும் பகிர்ந்து வரும் ஆசிரியர்கள், 'இது தான் ஆசிரியர்களின் நிலை; கண்ணீர் விடும் நிலைக்கு பள்ளி கல்வித்துறை எங்களைத் தள்ளியுள்ளது' என்று, கருத்து தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X