வக்கீலை தாக்கியகும்பலுக்கு வலை

Added : ஆக 25, 2022 | |
Advertisement
வில்லியனுார்: மங்கலம் அருகே காரை சேதப்படுத்தி, வக்கீலை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மங்கலம் அருகே உள்ள கீழ்சாத்தமங்கலம் பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் நஜித்குமார்(33); வக்கீல்.இவர் நேற்று முன்தினம் காலை 7:30 மணியளவில் தனது காரில் புதுச்சேரி நோக்கி சென்றார்.கீழ்சாத்தமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த

வில்லியனுார்: மங்கலம் அருகே காரை சேதப்படுத்தி, வக்கீலை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மங்கலம் அருகே உள்ள கீழ்சாத்தமங்கலம் பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் நஜித்குமார்(33); வக்கீல்.இவர் நேற்று முன்தினம் காலை 7:30 மணியளவில் தனது காரில் புதுச்சேரி நோக்கி சென்றார்.கீழ்சாத்தமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் நிறுத்தி பயணிகளை இறக்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டதை வக்கீல் நஜித்குமார் தட்டிக்கேட்டுள்ளார்.

அதனால், பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த வசந்த், குப்புசாமி, குமார், வெள்ளையப்பன், தாமஸ், பிரகாஷ் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட கும்பலுக்கும், வக்கீலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்து வக்கீல் நஜித்குமார், மங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், ஒரு கும்பல் தன்னை தாக்கியதுடன், காரையும் சேதப்படுத்தியது என குறிப்பிட்டுள்ளார்.அதன்பேரில், வசந்த் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X