அரசு பஸ் ஊழியர்கள் சம்பளம் 4 ஆண்டுக்கு ஒருமுறை உயரும்

Updated : ஆக 25, 2022 | Added : ஆக 25, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை--''அரசு பஸ் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு இனி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்துக்கான ஏழாம் கட்ட பேச்சு, நேற்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது. அதில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--''அரசு பஸ் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு இனி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.latest tamil newsஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்துக்கான ஏழாம் கட்ட பேச்சு, நேற்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது. அதில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், செயலர் கோபால், நிதித் துறை கூடுதல் செயலர் அருண் சுந்தர் தயாளன், தொழிலாளர் தனி இணை கமிஷனர் லட்சுமிகாந்தன் ஆகியோர், ஊதிய ஒப்பந்த கூட்டு குழுவினர், தொழிற்சங்கத்தினருடன் பேச்சு நடத்தினர்.

பின், அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, 14வது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2019ன்படி உள்ள நிரந்தர தொழிலாளர்களுக்கு, 'பே மேட்ரிக்ஸ்' எனும் மூத்தோர், இளையோர் விகிதத்தின் அடிப்படையில், 5 சதவீத உயர்வு அளித்து, அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

இதன்படி, தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சமாக 1,000 ரூபாயும், அதிகபட்சமாக 7,000 ரூபாயும் உயர்வு கிடைக்கும். சலவை, 'ஷிப்ட், ஸ்டியரிங்' மற்றும் இரவு தங்கல் உள்ளிட்டவற்றுக்கான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும், ஒரே வழிகாட்டுதலுக்கான நிலையாணை நடைமுறைப்படுத்தப்படும். மலைப் பகுதிகளில் பணிபுரிவோருக்கு, மாதம் 3,000 ரூபாய் படி வழங்கப்படும். இறந்த பணியாளரின் குடும்ப நலநிதி, ௩ லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இனி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளாக மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
இன்று ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த காலத்தை மூன்றாண்டுகளாக தொடர வேண்டும். ஓய்வூதியர் பணப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுக்குழுவில் உள்ள, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., பணியாளர் சம்மேளனம் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர், இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.ஒப்பந்த காலத்தை மூன்றாண்டுகளாக தொடர வேண்டும். ஓய்வூதியர் பணப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுக்குழுவில் உள்ள, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., பணியாளர் சம்மேளனம் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர், இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
25-ஆக-202220:43:03 IST Report Abuse
J.Isaac அநேக தொழிற்சாலைகள், நூற்பாலைகள் மூட காரணமான இந்த தொழிற்சங்கங்கள் தடைசெய்யப்பட்ட வேண்டும்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
25-ஆக-202216:52:46 IST Report Abuse
Narayanan The same way all prices should be raised only once in 5 years . No increase in gold and vege everyday .Can this minister says this ??
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
25-ஆக-202210:59:14 IST Report Abuse
Rajarajan மத்திய / மாநில அரசு ஊழியருக்கு, சம்பளம், பஞ்சபடி, போனஸ், இதர படிகள் உயர்ந்துக்கிட்டே தான் இருக்கும். அப்பறம், பொதுமக்கள் அரசு மீது கோபம் கொண்டு, விலைவாசியை உயர்த்திட்டாங்க, வரியை உயர்த்திட்டாங்கனு புலம்பி ஒரு உபயோகமும் இல்லை. இவர் வந்தா விலைவாசி கட்டுக்குள் இருக்கும், அவர் வந்தா கட்டுக்குள் இருக்கும்னு தயவுசெய்து சொல்லாதீங்க. இது ஒரு தொடர்கதை. இது வரவுக்கும் செலவுக்குமான கட்டுக்கடங்கா நஷ்ட பொருளாதாரம். வழக்கம்போல இளிச்சவாயன் தனியார் ஊழியர் பொதுஜனம் தலையில் தான் இந்த மிளகாய் அரைக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X