மது போதை 'வீடியோ': மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்

Updated : ஆக 25, 2022 | Added : ஆக 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஹெல்சிங்கி: மது போதையில் இருந்த தன் 'வீடியோ'வும் புகைப்படமும் வெளியானது குறித்து பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் மன்னிப்பு கோரியுள்ளார்.ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமரான சன்னா மரீன் 37, உலகின் மிக இள வயது பிரதமர் என்ற பெருமைக்குரியவர். சமீபத்தில் இவருடைய வீட்டில் நடைபெற்ற 'பார்ட்டி' ஒன்றில் தன் தோழியருடன் மது அருந்தி நடனம் ஆடிய வீடியோ கடந்த வாரம் வெளியானது.
மது போதை,  பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் , Finnish Prime Minister Sanna Marin,Finland PM, Apologises,Sanna Marin,Sanna,

ஹெல்சிங்கி: மது போதையில் இருந்த தன் 'வீடியோ'வும் புகைப்படமும் வெளியானது குறித்து பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமரான சன்னா மரீன் 37, உலகின் மிக இள வயது பிரதமர் என்ற பெருமைக்குரியவர். சமீபத்தில் இவருடைய வீட்டில் நடைபெற்ற 'பார்ட்டி' ஒன்றில் தன் தோழியருடன் மது அருந்தி நடனம் ஆடிய வீடியோ கடந்த வாரம் வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பலரும் கண்டனம் தெரிவித்தனர் .


latest tamil news


இது குறித்து சன்னா மரீன் கூறுகையில் ''நான் மது அருந்தி நடனம் ஆடியது உண்மை தான். ஆனால் வேறு போதைப் பொருள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை'' என்றார். இந்நிலையில் அவருடைய தோழியருடன் முத்தமிடுவது போன்ற ஒரு புகைப்படம் நேற்று வெளியானது.

இது குறித்து சன்னா மரீன் கூறியதாவது: அந்த புகைப்படம் ஒரு தனிப்பட்ட விருந்தின்போது என் வீட்டில் எடுக்கப்பட்டது. அது மாதிரியான புகைப்படத்தை எடுத்திருக்கக் கூடாது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-202212:01:11 IST Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி பின்லாந்து ஒரு சிறிய நாடு. நோக்கியா என்ற கம்பெனி இல்லையெனில் இந்த நாட்டை யாருக்கும் தெரியாது. பெஸ்ட் எடுகேஷன் உள்ள நாட்டில் ஏன் இன்னும் நோபல் பரிசு வாங்க வில்லை. நாட்டுக்கு வருமானம் வரனும் அதுனால எதாவது புதுசா செய்யுரோம் னு சொல்லவேண்டும். இல்ல வயசு குறைந்த பிரதமரை வைத்து பார்ட்டி செய்து லைம் லைட் ல இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X