மில்களை மீண்டும் இயக்க அசோக்பாபு கோரிக்கை

Added : ஆக 25, 2022 | |
Advertisement
புதுச்சேரி : மூன்று மில்களை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என நியமன எம்.எல்.ஏ., அசோக்பாபு பேசினார்.சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது;அனைத்து தரப்பு மக்களுக்கும் உகந்த இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன். வள்ளல் கர்ணன் போல, கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச லேப்டாப் திட்டத்தை மீண்டும்

புதுச்சேரி : மூன்று மில்களை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என நியமன எம்.எல்.ஏ., அசோக்பாபு பேசினார்.

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது;அனைத்து தரப்பு மக்களுக்கும் உகந்த இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன். வள்ளல் கர்ணன் போல, கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச லேப்டாப் திட்டத்தை மீண்டும் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. கடந்த 5 ஆண்டில் ஒரு இளைஞருக்கு கூட வேலை வழங்கப்படவில்லை. தற்போதைய ஆட்சியில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவித்திருப்பது பாராட்டுக்கு உரியது.

எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 2 கோடியாக உயர்த்தி இருப்பதை வரவேற்கிறேன்.கடந்த ஆட்சியில் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் சரியாக அமல்படுத்தப்படவில்லை. அதனை முழுமையாக செயல்படுத்தும் வகையில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அமல்படுத்துவது பாராட்டத் தக்கது. மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோருக்கும் கேட்காமலேயே உதவித் தொகையை அரசு வாரி வழங்குகிறது.

புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் கொண்டு வருவதாக கூறியிருப்பது வரவேற்கத் தக்கது. ஏ.எப்.டி. பாரதி, சுதேசி ஆகிய 3 மில்களையும் புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும். இதனால் புதுச்சேரியை சேர்ந்த பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கலாம். சுதந்திரத்திற்காக பாடுபட்ட புதுச்சேரி தியாகிகளுக்கு சிலை வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X