அரசு பள்ளிகளின் செயல்பாடு: லட்சுமிகாந்தன் பாராட்டு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
புதுச்சேரி : தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ., (என்.ஆர்.காங்.,) கூறினார்.சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. தற்போது, அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் சிபாரிசு கடிதம் கேட்கிறார்கள். நீட் போன்ற தேர்வுகளில் கிராமப்புற

புதுச்சேரி : தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ., (என்.ஆர்.காங்.,) கூறினார்.

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. தற்போது, அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் சிபாரிசு கடிதம் கேட்கிறார்கள். நீட் போன்ற தேர்வுகளில் கிராமப்புற மாணவர்கள் கலந்துகொள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டாயம் தேவை. மாணவர்களுக்கு இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேசிய சட்ட பல்கலைக்கழகம் வருவதன் மூலம் நம் மாநிலத்திற்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும். அனைத்து தொகுதியில் உள்ள பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது மன நிறைவை தருகிறது. இந்து ஆண்டுக்குள் அனைத்து அரசு காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என்ற அறிவிப்பால் பொது மக்கள் பயன்பெறுவர். அரசு துறை வேலைகளும் மிக எளிதாக நடைபெறும்.

எம்.எல்.ஏ.,க்களுக்கு கடந்த 5 ஆண்டு காலமாக தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படவில்லை. தற்போது அந்த தொகையை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருப்பது பாராட்டுக்கு உரியது.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X