ரூ.354 கோடியில் மின் உபகரணங்கள் புனரமைக்கப்படும்: நமச்சிவாயம்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
புதுச்சேரி : மின்துறை உபகரணங்கள் ரூ.354 கோடியில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:நேரு(சுயே); நகரப் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க சுதேசி மில் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா, மின் கட்டமைப்புகளை வலுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் நமச்சிவாயம்:

புதுச்சேரி : மின்துறை உபகரணங்கள் ரூ.354 கோடியில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:நேரு(சுயே); நகரப் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க சுதேசி மில் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா, மின் கட்டமைப்புகளை வலுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் நமச்சிவாயம்: மின்பாதையில் ஏற்படும் பழுதை நீக்கி உடனுக்குடன் மின்தடை சரி செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையை போக்க, தனியாக பணியாளர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுதேசி மில் வளாகத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் தேவை தற்போது ஏற்படவில்லை. எதிர்கால மின் தேவைக்கேற்ப துணை மின் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். நகரப் பகுதியில் உள்ள மின் விநியோக கட்டமைப்பை மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் திட்டத்தின் கீழ் மேடும்படுத்த திட்டமிட்டுளோம்.இதைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், சிவசங்கர், கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோர் மின்துறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர்.அமைச்சர் நமச்சிவாயம்: வீடுகளில் மின் கணக்கீட்டு பணி மேற்கொள்ள 'அவுட்சோர்சிங்' முறையில் பணியாளர்கள் நியமிக்க உள்ளோம். ரூ.15 கோடி செலவில் மின்துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.

மின் துறையில் உள்ள உபகரணங்கள் 30 ஆண்டுகள் பழமையானது. இதனால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இவற்றை 354 கோடி ரூபாயில் புதுப்பிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.'ஸ்மார்ட்' மின் மாற்றிகளாக மாற்றி வருகிறோம். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் 29 ஆயிரம் எல்.இ.டி., மின் விளக்குகள் ரூ. 30 கோடி செலவில் மாற்றும் திட்டம் உள்ளது. இப்பணிகள் முடிவடைந்தால் மின்தடை நீங்கி விடும்.பொதுப்பணித்துறை, நகராட்சி, மின்துறை சார்பில் அமைக்கப்படும் மின் விளக்குகளை இனி மின் துறையே பழுதுநீக்கும். தெருவிளக்கு சீரமைக்க ரேடார் வாகனம் வாங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X