புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ., - ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் புகாரால் பரபரப்பு!

Updated : ஆக 25, 2022 | Added : ஆக 25, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுச்சேரி: சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில், தங்கள் தொகுதிகள் புறக்கணிக்கப் படுவதாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ., மற்றும் ஆதரவு அளிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அரசு மீது சரமாரியாக புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரியில் என்.ஆர்.,காங்.,- பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி முதல்வராக

புதுச்சேரி: சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில், தங்கள் தொகுதிகள் புறக்கணிக்கப் படுவதாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ., மற்றும் ஆதரவு அளிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அரசு மீது சரமாரியாக புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



latest tamil news




புதுச்சேரியில் என்.ஆர்.,காங்.,- பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி முதல்வராக உள்ளார்.பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களான அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர், தங்கள் தொகுதியில் அடிப்படை வசதி செய்ய நிதி ஒதுக்கவில்லை. வாரியத் தலைவர் பதவி வழங்கவில்லை என அதிருப்தியில் உள்ளனர்.

இந்த அதிருப்தி, சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின் மீதும் எதிரொலித்தது.பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரமும் அரசு மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.சட்டசபையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பா.ஜ., மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் முன் வைத்த கருத்துக்கள் வருமாறு:


இது நியாயமா?


அங்காளன் (சுயேச்சை): நான் பல முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளேன். இதுவரை 33 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளேன். ஆனால் இப்போது எனது தொகுதியில் கோவில் கமிட்டி, பால் சொசைட்டிகளில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு தெரியாமலேயே உறுப்பினரை நியமிக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்.

அரசு இப்படி செய்வதற்கு என்ன காரணம். பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்காக மறுக்கிறார்களா. எந்த எம்.எல்.ஏ.,க்கள் 'சப்போர்ட்' செய்யப் போகின்றனர் என்பதால் இப்படி செய்கிறார்களா.

எம்.எல்.ஏ., பரிந்துரை இல்லாமல் கமிட்டி போடுவதாக இருந்தால் எல்லா தொகுதிகளிலும் அப்படி செய்யுங்கள்.எதிர்க்கட்சி தொகுதிகளில் எம்.எல்.ஏ.,க்கள் லிஸ்ட் கேட்டு, போடுகின்றீர்கள். என் தொகுதியில் என்னுடைய பரிந்துரையில் போடக்கூடாதா? என்னுடன், எனக்கு ஓட்டு போட்ட மக்களையும் தான் புறக்கணிக்கின்றீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்.கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் (சுயேச்சை):என்னுடைய ஏனாம் தொகுதியிலும் இப்படித் தான் நடந்து வருகிறது. மக்கள் பிரதிநிதிக்கு தெரியாமல் தான் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.


latest tamil news





பழிவாங்குகின்றனர்...



கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனையை கேட்டு இந்து அறநிலைய துறை கமிட்டியை போட வேண்டும் என்பது விதிமுறை. இந்த விதிமுறைப்படி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியில் இதனை முறையாக கடைபிடித்து செய்கின்றனர்.

ஆனால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியில் இந்த விதியை கடைபிடிக்காமல் எம்.எல்.ஏ., பரிந்துரை இல்லாமல் கமிட்டி உறுப்பினர்கள் போடப்படுகிறது. ஒரு விஷயம் வேண்டாம் என்றாலும் செய்கின்றனர். அப்படி என்றால் எம்.எல்.ஏ.,க்களின் உரிமை பறிபோகிறது என்று தானே அர்த்தம்.

பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் என்பதற்காக எங்களை பழிவாங்குகின்றீர்களா என்பதை சட்டசபையில் சொல்லிவிடலாம்.நடைமுறையில் இப்படித் தான் நடக்கிறது. இந்த அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். நாங்கள் கையெழுத்திட்டு அவரை முதல்வராக உட்கார வைத்துள்ளோம்.

பா.ஜ.,வுக்கு ஆதரவாக சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.பா.ஜ., எம்.எல்.ஏ., தொகுதிகளில் முதல்வர் பழிவாங்குகின்றாரா என்பதை வெளிப்படையாக சொல்லச் சொல்லுங்கள்.அதற்காக நாங்கள் கவலைப்படவில்லை. இந்த ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதிர்க்கட்சியாக கூட நாங்கள் உட்காருவோம்.


ஆறு மாதமாக பதில் இல்லை



கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக்: இந்து அறநிலைய ஆணையரிடம் கூட இது பற்றி தெரிவித்தாகி விட்டது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டும் ஏன் நடக்கிறது என தெரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளோம். மக்கள் பிரச்னை என்பதால் இதனை கேட்கிறோம்.

சிவசங்கர் (சுயேச்சை): என் தொகுதியில் கோவில் கமிட்டிக்கு என்னுடைய பரிந்துரையில் போடுவதில்லை. பொறுத்து பார்த்தேன். எனது ஆட்கள் கூட தேவையில்லை. என்னை கோவில் விழாவிற்கு கூப்பிட தேவையில்லை.என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்தவர்களை கூட கமிட்டியில் போட்டுக்கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு பிடித்தவர்களை போட்டுக் கொள்ளுங்கள் என்று கூட முதல்வரிடம் சொல்லிவிட்டேன். அதற்கும் ஆறு மாதமாக பதில் இல்லை.

கல்யாணசுந்தரம்: பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மட்டுமல்ல; சபாநாயகர், உள்துறை அமைச்சர் தொகுதியில் கூட அப்படித்தான் நடக்கின்றது. பிரதமர் நிதி தரவில்லை. நிதி கமிஷனில் சேர்க்கவில்லை என்கின்றனர். இங்கு கூட்டணி அரசை ஏற்படுத்தி உள்ளோம். ஆனால் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகள் கூட புறக்கணிக்கப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

என்.ஆர்.காங்., அரசு மீது கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ., எம்.எல்.ஏ.., மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manjunathan Shan - Sydney,ஆஸ்திரேலியா
25-ஆக-202212:57:32 IST Report Abuse
Manjunathan Shan முதல்வர் தமிழிசை மீது குற்றமா , ஐடி ரைட் வரும் ,லட்டு சாப்பிட்டு போகவும்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
25-ஆக-202211:01:58 IST Report Abuse
jayvee ரங்கசாமியை யாரு கட்டுப்படுத்துவது என்ற போட்டிதான் இன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது.. அவரது மருமகனுக்கும் BJP க்கும் இடையே நடக்கும் போட்டியில், பாண்டிச்சேரி காணாமல் போவது நிச்சயம்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-ஆக-202210:04:49 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //இந்த ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதிர்க்கட்சியாக கூட நாங்கள் உட்காருவோம்.// பாஜாக்கா எம்எல்ஏக்கள்.. ஹா ஹா .. அடுத்த தேர்தலில் முச்சந்தியில், கவொல் வாசலில் தான் நிக்கோணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X