சிறு தொழில்துறை திட்டங்கள் திருப்பூரில் முதல்வர் துவக்கம்| Dinamalar

சிறு தொழில்துறை திட்டங்கள் திருப்பூரில் முதல்வர் துவக்கம்

Added : ஆக 25, 2022 | |
திருப்பூர்: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும், 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' மண்டல மாநாடு திருப்பூரில் இன்று நடக்கிறது.கோவையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், நேற்றிரவு திருப்பூரில் தங்கினார். குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை சார்பில், இன்று காலை, 10:00 மணிக்கு, பாப்பீஸ் ஓட்டலில் நடைபெற உள்ள, 'தோள்

திருப்பூர்: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும், 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' மண்டல மாநாடு திருப்பூரில் இன்று நடக்கிறது.



கோவையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், நேற்றிரவு திருப்பூரில் தங்கினார். குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை சார்பில், இன்று காலை, 10:00 மணிக்கு, பாப்பீஸ் ஓட்டலில் நடைபெற உள்ள, 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற மண்டல மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார்.



அமைச்சர்கள் அன்பரசன், சாமிநாதன், கயல்விழி, அரசு செயலர் அருண்ராய், தொழில் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு கயிறு மேம்பாட்டு நிறுவனம், பிணையில்லாத கடன் வசதிக்கான கடன் உத்தரவாத திட்டம், நாரணாபுரம் பின்னலாடை குழுமத்துக்கான பொது வசதி மையம், தமிழ்நாடு வர்த்தக வரவு தள்ளுபடி மையம் ஆகியவற்றை முதல்வர் துவக்கி வைக்கிறார்.குறிச்சி தொழிற்பேட்டையில் தொழிலாளர் தங்கும் விடுதி, சொலவம்பாளையம் தனியார் தொழிற்பேட்டை, அரியகாவுண்டன்பட்டியில் வெள்ளி கொலுசு தொழிலுக்கான பொது வசதி மையம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X