பாட்டியின் பிணத்துடன் பேரன், பேத்திகள் காட்டிய சிரிப்பு 'போஸ்': கேரளாவில் சர்ச்சை

Updated : ஆக 25, 2022 | Added : ஆக 25, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் இறந்துபோன 95 வயது பாட்டியின் உடலோடு ஒரு குடும்பமே சிரித்த முகத்துடன் குழுவாக புகைப்படம் எடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மல்லப்பள்ளியைச் சேர்ந்தது பனவெலில் குடும்பம். அந்த குடும்பத்தில் மூத்தவரான 95 வயது மூதாட்டி மரியம்மா வர்கீஸ் கடந்த வாரம் இறந்துபோனார். இவரது கணவரான கிறிஸ்தவ மதபோதகர் வர்கீஸ் ஏற்கனவே
கேரளா, குடும்ப போட்டோ, பாட்டி பிணம், மூதாட்டி, குரூப் போட்டோ, குழு புகைப்படம், Smiling Snap, Family photo, Kerala,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவனந்தபுரம்: கேரளாவில் இறந்துபோன 95 வயது பாட்டியின் உடலோடு ஒரு குடும்பமே சிரித்த முகத்துடன் குழுவாக புகைப்படம் எடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மல்லப்பள்ளியைச் சேர்ந்தது பனவெலில் குடும்பம். அந்த குடும்பத்தில் மூத்தவரான 95 வயது மூதாட்டி மரியம்மா வர்கீஸ் கடந்த வாரம் இறந்துபோனார். இவரது கணவரான கிறிஸ்தவ மதபோதகர் வர்கீஸ் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார். இவர்களுக்கு 9 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள். அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கின்றனர். மூதாட்டியின் இறுதிநாட்களில் குழந்தைகள், பேரக்குழந்தைகள் அனைவரும் வந்துள்ளனர்.


latest tamil news


மூதாட்டி இறந்ததும் கிறிஸ்தவ மத வழக்கப்படி முறையாக இறுதிச்சடங்கு செய்தனர். ஆனால் அதற்கு முன்னதாக அவரது உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியுடன் சிரித்த முகத்தோடு அனைவரும் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் வைரலாக பரவியதை அடுத்து, சர்ச்சையானது. இது குறித்து மூதாட்டியின் மூத்த மகன் ஜார்ஜ் உம்மனோ (68) கூறுகையில், 'மற்றவர்களின் கருத்து பற்றி எங்களுக்கு கவலையில்லை. நிறைவான வாழ்வை வாழ்ந்து முடித்த எங்கள் தாயின் மரணத்தின்போது குடும்பத்தினர் அனைவரும் இயல்பான உணர்வை வெளிப்படுத்தினோம்.

பின்னர், அவருடனான சிரிப்பும், நெகிழ்வுமான தருணங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டோம். அப்போது எடுத்த ஒரு படம்தான் இது. பத்து ஆண்டுகளுக்கு முன் எங்கள் தந்தை இறந்தபோதும் இப்படித்தான் மகிழ்வாக இறுதி விடை கொடுத்தோம்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
25-ஆக-202220:08:30 IST Report Abuse
M S RAGHUNATHAN தவறு எதுவும் இல்லை.
Rate this:
Cancel
sangu - coimbatore,இந்தியா
25-ஆக-202217:54:40 IST Report Abuse
sangu இதை கல்யாண சாவு எனதான் சொல்வார்கள், எனவே வருத்தப்பட ஒன்னும் இல்லை.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஆக-202216:07:41 IST Report Abuse
Kasimani Baskaran அதிக நாள் படுக்கையிலிருந்து வயதானவர்கள் இறக்கும் பொழுது விமர்சையாக கொண்டாடுவார்கள். இது போல சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவதை பார்த்ததில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X