அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சரக விளையாட்டு போட்டிகள்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சரக அளவிலான விளையாட்டு போட்டிகள், மாணவியருக்கு கோ கோ, மாணவ, மாணவியருக்கு வளையப்பந்து ஒன்றையர், இரட்டையர், பூப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள், 14, 17 மற்றும், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நேற்று நடந்தது.நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சூசைநாதன், விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத்துறை முதல்வர்


கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சரக அளவிலான விளையாட்டு போட்டிகள், மாணவியருக்கு கோ கோ, மாணவ, மாணவியருக்கு வளையப்பந்து ஒன்றையர், இரட்டையர், பூப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள், 14, 17 மற்றும், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நேற்று நடந்தது.
நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சூசைநாதன், விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத்துறை முதல்வர் ஜான்பிரிட்டோ, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் பசவராஜ், பெருமாள் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இதில், 14, 17, 19 வயது பிரிவில், கோ கோ, பூப்பந்தாட்டம் ஆகிய போட்டியில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் வெற்றி பெற்றனர்.
பூப்பந்தாட்டம் ஆண்கள் பிரிவில், 14, 19 வயது பிரிவில் டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். 17 வயது பிரிவில் விஜய் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை நகராட்சி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியரும், சகர விளையாட்டு போட்டியின் இணை செயலாளருமான சுப்புராஜ் செய்திருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X