ராஜகணபதி கோவிலில் 12 நாள் சதுர்த்தி விழா

Added : ஆக 25, 2022 | |
Advertisement
ராஜகணபதி கோவிலில், 12 நாள் விநாயகர் சதுர்த்தி விழா நடக்க உள்ளது.சேலம் டவுனில் உள்ள ராஜகணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 31ல் தொடங்கி, 12 நாள் நடக்க உள்ளது. 31ல் சதுர்த்தி விழா அன்று காலை, 4:00 முதல், 6:00 மணிக்குள் கணபதி ஹோமம், மாலை, 4:00 முதல், 10:00 மணி வரை ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்தப்படும்.செப்., 1 காலை அபிஷேகம், ஆராதனை, மாலை வல்லபகணபதி சிறப்பு அலங்காரம், இரவு சுவாமி சிறப்பு


ராஜகணபதி கோவிலில், 12 நாள் விநாயகர் சதுர்த்தி விழா நடக்க உள்ளது.
சேலம் டவுனில் உள்ள ராஜகணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 31ல் தொடங்கி, 12 நாள் நடக்க உள்ளது. 31ல் சதுர்த்தி விழா அன்று காலை, 4:00 முதல், 6:00 மணிக்குள் கணபதி ஹோமம், மாலை, 4:00 முதல், 10:00 மணி வரை ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்தப்படும்.
செப்., 1 காலை அபிஷேகம், ஆராதனை, மாலை வல்லபகணபதி சிறப்பு அலங்காரம், இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடக்கும். 2 காலை திருக்கல்யாண உற்சவம், மாலை குமாரகணபதி அலங்காரம், இரவு திருவீதி புறப்பாடு, 3ல் மூலவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். 4, 5, 6 காலை அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, திருவீதி புறப்பாடு நடக்க உள்ளது. 7ல் லட்சுமி கணபதி சிறப்பு அலங்காரம், 8ல் முத்தங்கி அலங்காரம், 9ல் சித்தி புத்தி கணபதி அலங்காரம், இரவு, 12:00 மணிக்கு மலர் பல்லக்கில் சுவாமி சத்தாபரணம், 10ல் புஷ்ப சத்தாபரணம் நடக்க உள்ளது.
விழா நிறைவு நாளான, 11 காலை, 7:00 முதல், 10:00 மணிக்குள் மஞ்சள் நீராட்டு, வசந்த உற்சவம், 10:00 முதல் மதியம், 12:30 மணிக்குள் உற்சவ ஆஸ்தான பூஜை, 1,008 லிட்டர் பால் அபிஷேகம், புஷ்பாஞ்சலி, அன்னதானம் நடக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X