பா.ஜ., - மா.செ., மீது தாக்கு மண்டல தலைவர் மீது வழக்கு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் நவீன்குமார், 49. பா.ஜ.,வில், மத்திய அரசின் திட்டப்பணி குறித்த அமைப்பின், மாவட்ட செயலராக உள்ளார். இவரது நண்பர் அங்கப்பன், 45. கன்னங்குறிச்சி மண்டல பா.ஜ., தலைவராக உள்ளார். இவர்கள் இடையே முன்விரோதம் உள்ளது. கடந்த, 22 இரவு, 7:15 மணிக்கு, நவீன்குமார், அழகாபுரம், செயின்ட் ஜான்ஸ் பள்ளி அருகே உள்ள அங்கப்பனின் அலுவலகம் அருகே, காரை நிறுத்தினார். அப்போது,

சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் நவீன்குமார், 49. பா.ஜ.,வில், மத்திய அரசின் திட்டப்பணி குறித்த அமைப்பின், மாவட்ட செயலராக உள்ளார். இவரது நண்பர் அங்கப்பன், 45. கன்னங்குறிச்சி மண்டல பா.ஜ., தலைவராக உள்ளார்.
இவர்கள் இடையே முன்விரோதம் உள்ளது. கடந்த, 22 இரவு, 7:15 மணிக்கு, நவீன்குமார், அழகாபுரம், செயின்ட் ஜான்ஸ் பள்ளி அருகே உள்ள அங்கப்பனின் அலுவலகம் அருகே, காரை நிறுத்தினார். அப்போது, அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கப்பன், அவரது நண்பர் கருப்பண்ணன் ஆகியோர் சேர்ந்து நவீன்குமாரை தாக்கினர். காயம் அடைந்த அவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, அங்கப்பன், கருப்பண்ணன் மீது அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X