பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட தார்ச்சாலை மீண்டும் அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி| Dinamalar

பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட தார்ச்சாலை மீண்டும் அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி

Added : ஆக 25, 2022 | |
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் மற்றும் சிறுபாலம் கட்டிய இடங்களில், தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர், தின்னப்பா கார்னர் அருகே, கடந்த சில மாதங்களுக்கு முன், பாதாள சாக்கடை குழாய் சேதமடைந்தது. இதனால், அதை சரி செய்ய குழிகள் தோண்டப்பட்டு, பராமரிப்பு வேலைகள் நடந்து முடிந்தன. தற்போது, பராமரிப்பு

கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் மற்றும் சிறுபாலம் கட்டிய இடங்களில், தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டி
கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர், தின்னப்பா கார்னர் அருகே, கடந்த சில மாதங்களுக்கு முன், பாதாள சாக்கடை குழாய் சேதமடைந்தது. இதனால், அதை சரி செய்ய குழிகள் தோண்டப்பட்டு, பராமரிப்பு வேலைகள் நடந்து முடிந்தன. தற்போது, பராமரிப்பு வேலை முடிந்த நிலையில், புதிதாக தார்ச்சாலை அமைக்காமல், மண் கொட்டி குழியை மூடியுள்ளனர்.
இதனால், மழை பெய்யும்போது, அந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. மேலும், அந்த பகுதி
யில் மருத்துவமனை, ஜவுளி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீ கடைகள் செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் சேற்றில் செல்ல முடியாமல் சிரமப்பட்டு செல்கின்றனர்.
* கரூர் அருகே கொளந்தானுார் கால்நடை மருத்துவமனை அருகே, சில மாதங்களுக்கு முன், சாலையின் குறுக்கே புதிதாக சிறு பாலம் கட்டப்பட்டது. ஆனால், பாலம் கட்டிய இடத்தில், இணைப்பு தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதி வழியாக செல்லும், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும், அந்த பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி, கால்நடை துறை அலுவலகம் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. எனவே, கொளந்தானுார் கால்நடை மருத்துவமனை அருகே, புதிதாக தார்ச்சாலை அமைக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X