விவசாயிக்கு வெட்டு: 2 வாலிபர்கள் சரண்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
விவசாயியை வெட்டிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வந்த, இரண்டு வாலிபர்கள், நாமக்கல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அடுத்த சேவாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன், 51. இவர், கடந்த 2ம் தேதி டூவீலரில் வீட்டுக்கு சென்றபோது, மர்மகும்பல் முருகேசனை வழிமறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த


விவசாயியை வெட்டிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வந்த, இரண்டு வாலிபர்கள், நாமக்கல் நீதிமன்றத்தில் நேற்று
சரணடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அடுத்த சேவாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன், 51. இவர், கடந்த 2ம் தேதி டூவீலரில் வீட்டுக்கு சென்றபோது, மர்மகும்பல் முருகேசனை வழிமறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த முருகேசன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக, புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், இவ்வழக்கில் பெரம்பலுாரைச் சேர்ந்த விஜயகுமார், 43, ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், 21, மண்ணச்சநல்லுார் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்த பழனிசாமி, 25, மற்றும், 16 வயது சிறுவன் உள்ளிட்ட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அஜித், 23, தென்னரசு, 21, ஆகியோர் இருவரும், நேற்று, நாமக்கல், 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் விஸ்வநாதன் முன்னிலையில் சரண் அடைந்தார்.
அவர்களை, வரும், செப்., 5 வரை, நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தொடர்ந்து, அவர்கள், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X