காலை உணவு திட்டம் பணி: கலெக்டர் ஆய்வு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
நாமக்கல் பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கான முன்னேற்பாடு பணிகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டம், மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள், மலைப்பகுதிகள் என, பல்வேறு பகுதிகளில், தமிழக அரசால் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் மற்றும்


நாமக்கல் பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கான முன்னேற்பாடு பணிகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.
ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டம், மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள், மலைப்பகுதிகள் என, பல்வேறு பகுதிகளில், தமிழக அரசால் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு நகராட்சி, மலைப்பகுதியான கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் துவக்கப்பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சியில், இத்திட்டத்தின் கீழ், நாமக்கல்-சேலம் சாலை, முதலைப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள மைய சமையற்கூடத்தில் அடிப்படை வசதிகள் குறித்து, கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, காலை உணவு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள, நாமக்கல் மஜித் தெரு நகராட்சி உருது துவக்கப்பள்ளி, கோட்டை நகராட்சி துவக்கப்பள்ளி, பதிநகர் நகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு, கலெக்டர் ஸ்ரேயா சிங் சென்று, பள்ளி தலைமையாசிரியர்களுடன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.
அப்போது பதிநகர் நகராட்சி துவக்கப்பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து, பாடப்புத்தகங்களை வாசிக்கச் செய்தும், கதைகள் மற்றும் பாடல்களை பாடச்சொல்லியும் ஆய்வு செய்தார். நன்றாக கற்றல் திறனை வெளிப்படுத்திய மாணவியர் இருவருக்கு, வரைவதற்கான பொருட்களை கலெக்டர் பரிசாக வழங்கினார். ஆய்வில், நகராட்சி கமிஷனர் சுதா, பொறியாளர் சுகுமார், பள்ளி தலைமையாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X