செய்திகள் சில வரிகளில் ஈரோடு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
விநாயகர் சதுர்த்தி கண்காட்சி விற்பனைஈரோடு: ஈரோட்டில், மேட்டூர் சாலையில் உள்ள, பூம்புகார் விற்பனை நிலையத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் கண்காட்சி, விற்பனை நேற்று துவங்கியது. வரும், 31ம் தேதி வரை நடக்கிறது.பஞ்சலோகம், பித்தளை, பேப்பர் கூழ், மண், வெள்ளெருக்குவேர், மார்பில் பவுடர், மாவுக்கல், கருங்கல்லால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், வெண் மரம், நுாக்க



விநாயகர் சதுர்த்தி
கண்காட்சி விற்பனை
ஈரோடு: ஈரோட்டில், மேட்டூர் சாலையில் உள்ள, பூம்புகார் விற்பனை நிலையத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் கண்காட்சி, விற்பனை நேற்று துவங்கியது. வரும், 31ம் தேதி வரை நடக்கிறது.
பஞ்சலோகம், பித்தளை, பேப்பர் கூழ், மண், வெள்ளெருக்குவேர், மார்பில் பவுடர், மாவுக்கல், கருங்கல்லால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், வெண் மரம், நுாக்க மரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிக விநாயகர், தஞ்சாவூர் ஓவியம், கலை தட்டுகளில் செய்யப்பட்ட விநாயகர் மற்றும் பல்வேறு வகை வண்ண வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிலைகள், 75 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ளன. குறிப்பிட்ட சிலைகளுக்கு, 10 சதவீத தள்ளுபடியும் உண்டு என, பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

பஸ் மோதி வாலிபர் பலி
கோபி: திருப்பூர், காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 29; கூரியர் நிறுவன ஊழியர். ஹீரோ ேஹாண்டா ஸ்பிளெண்டர் பைக்கில், கோபி அருகே வெள்ளப்பாறைமேடு என்ற இடத்தில், நேற்று மதியம், 12:00 மணிக்கு சென்றார். எதிரே வந்த டூரிஸ்ட் பஸ் மோதியதில், பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்தில் பலியான கார்த்திகேயனுக்கு சிவரஞ்சனி, 25, என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளதாக, சிறுவலுார் போலீசார் தெரிவித்தனர்.

எஸ்.ஐ., பணியிட மாற்றம்
ஈரோடு: வெள்ளோடு, கனகபுரம், ராசா கோவில் அருகே கடந்த, 22ம் தேதி மொபட் மீது கார் மோதியதில், ஈரோடு, வடமலைபாளையம், காமராஜ் காலனியை சேர்ந்த பிரகாஷ், 40, பலியானார். வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிந்து, கார் டிரைவர் சசிக்குமாரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில் வெள்ளோடு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மணிவண்ணன், உயரதிகாரிகளுக்கு தவறான தகவல் அளித்துள்ளார். இதனால் அவரை கொடுமுடி ஸ்டேஷனுக்கு, இடமாற்றம் செய்து, எஸ்.பி., உத்தரவிட்டார்.

விசைத்தறியாளர் வரவேற்பு
ஈரோடு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் நடப்பாண்டு இலவச வேட்டி-சேலை தயாரிக்க, அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், இதற்கான நுால் டெண்டர் அறிவிப்பு கோரப்பட்டுள்ளதற்கு விசைத்தறியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 10 நாட்களுக்குள் நுால் டென்டர் முடிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் வினியோகிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, 20 நாட்களுக்குள் வேட்டி-சேலை உற்பத்தியை தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கதக்கது என்று, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த சக்திவேல், ராமநாதபுரம் மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி கமிஷனரின் நேர்முக உதவியாளர் சையத் ஹுசைன், புன்செய்புளியம்பட்டிக்கு நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பவானியில் 7 மி.மீ., மழை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பவானியில், 7 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் பெருந்துறையில், 3, எலந்தகுட்டைமேட்டில், 1.80 மி.மீ., மழை பதிவானது. ஈரோடு மாநகரில் நேற்று மதியம் லேசான சாரல் மழை பெய்தது. அதேசமயம் கனமழை அறிகுறியாக, மேகமூட்டம் நீண்ட நேரம் சூழ்ந்து மக்களை அச்சுறுத்தியது.

ரயிலிலிருந்து விழுந்தவர் பலி
ஈரோடு: மகுடஞ்சாவடி-மாவெலிபாளையம் இடையிலான ரயில்வே பாதையில், 45 வயது
மதிக்கத்தக்க ஆண் சடலம், நேற்று முன்தினம் கிடந்தது. ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயிலில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது, தவறி விழுந்ததில் இறந்ததாக, போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பயிற்சி
ஈரோடு: இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்
களுக்கு, நேற்றுடன் பயிற்சி நிறைவு பெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட துவக்க, இடை நிலை கல்வி கற்பிக்கும் தன்னார்வலர்கள், 6,501 பேருக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி கடந்த, 22ல் துவங்கியது. மாவட்டத்தில், 14 யூனியன்களில் உள்ள குறு வள மைய பகுதிகளில் பயிற்சி நடக்கிறது. ஈரோடு, திருநகர் காலனி மாநகராட்சி நடுநிலை பள்ளியில், தன்னார்வலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு நேற்றுடன் பயிற்சி முடிந்தது. பிற இடங்களில் இன்று பயிற்சி நிறைவு பெற உள்ளதாக, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.
புஞ்சை பாலதொழுவில்
டிரான்ஸ்பார்மர் திறப்பு
சென்னிமலை, ஆக. 25-
சென்னிமலை யூனியன் புஞ்சை பாலதொழுவு ஊராட்சி பகுதியில், மின் தட்டுப்பாடு உள்ளதாக, மக்கள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து மின்வாரியம் சார்பில், ஊராட்சிக்கு உட்பட்ட ஹை-வே சிட்டி அருகில், 67 கே.வி.திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதை சேர்மேன் காயத்ரி இளங்கோ மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் செல்வம், ஊராட்சி தலைவர் தங்கமணி விஜயகுமார், மின்வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் நித்யா, இளம் மின்பொறியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

42 பேருக்கு கொரோனா
ஈரோடு, ஆக. 25-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 42 பேருக்கு கொரோனா உறுதியானது. அதேசமயம், 47 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். நேற்றைய நிலவரப்படி, 314 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதித்தோர் பட்டியலில், ஈரோடு மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

குண்டாசில் வாலிபர்
சிறையில் அடைப்பு
ஈரோடு, ஆக. 25-
ஈரோட்டில் கொலை, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர், குண்டர் தடுப்பு காவல்
சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு, கருங்கல்பாளையம், கிருஷ்ணம்
பாளையம் சிந்தன் நகரை சேர்ந்த மாது மகன் வேல்முருகன், 21, கூலி தொழிலாளி. இவர் மீது கருங்கல்பாளையம் போலீசில் கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட நான்கு வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்கில் கைதாகி, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, கருங்கல்பாளையம் போலீசார், எஸ்.பி., வாயிலாக கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, இதை ஏற்றுக் கொள்ளவே, கருங்கல்பாளையம் போலீசார் வேல்முருகனை, நேற்று கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தாராபுரத்தில் ௨௭ம் தேதி
வேலை வாய்ப்பு முகாம்
தாராபுரம், ஆக. 25-
தாராபுரத்தில் நாளை மறுதினம் (27ம் தேதி), தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தாராபுரம் பைவ் கார்னரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. இதில், 18 வயது முதல், 45 வயது வரையிலான ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 99650-63377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கண்காணிப்பு அலுவலர்
ஈரோட்டில் ஆய்வு
ஈரோடு, ஆக. 25-
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை கட்டட பணிகள் நடக்கிறது. பணிகளை நேற்று ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் வளாகத்தில் நடக்கும் பல்நோக்கு மைய கட்டட பணிகள் ஆய்வு குறித்தும், மாவட்டத்தில் இரண்டு மாதிரி பள்ளிகளின் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. என்ன தேவைகள், என்ன சிரமங்கள் உள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அரசுக்கு ஒவ்வொரு மாதமும் அறிக்கையை சமர்ப்பித்து உயர் அதிகாரிகள் கவனத்துக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் எங்களை போன்ற கண்காணிப்பு அலுவலர்களின் முக்கிய பணி. முதல் கட்டமாக தற்போது கல்வி மற்றும் சுகாதார துறையை கையில் எடுத்துள்ளோம். ஒப்பந்த பணியாளர்களின் குறை குறித்து கேட்டு அறிந்தேன். இவ்வாறு அவர் கூறினார். பெண் எஸ்.ஐ., பொறுப்பேற்பு
தாராபுரம், ஆக. 25-
தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக, உடுமலை அனைத்து மகளிர் ஸ்டேஷன் எஸ்.ஐ., பாதம் பிரியா, 42, நியமிக்கப்பட்டார். இவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். சக போலீசார் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நகை பறிப்பு வழக்கில் கைதான
2 பேரிடம் கஸ்டடி விசாரணை
ஈரோடு, ஆக. 25-
ஈரோட்டில் நகை பறிப்பில் கைதான இரு வாலிபர்களிடம், போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்து, ஏழு பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாநகரில் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட, நாமக்கல் மாவட்டம் கவுண்டன்பட்டி, குட்டை தெரு ஜெயக்குமார் மகன் மணிகண்டன், 27; அதே பகுதி நடராஜபுரம் நான்காவது வீதி பொன்னுச்சாமி மகன் தவச்செல்வன், 21,
ஆகியோரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். அப்போது ஏழு பவுன் நகைகளை, அவர்களிடம் பறிமுதல் செய்தனர். இருவரையும் சூரம்பட்டி போலீசார், ஒரு நாள் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.
இதில், சூரம்பட்டி, ஈரோடு தாலுகா பகுதியில் இரு பெண்களிடம் ஏழு பவுன் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
நகையை மீட்ட நிலையில், இருவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தக்காளி விலை கடும் சரிவு
பல்லடம், ஆக. 25--
பல்லடம் வட்டாரத்தில், தக்காளி, வெங்காயம், வெண்டை, புடலை, பாகற்காய், கத்தரி உள்ளிட்ட பல்வேறு தோட்ட பயிர்கள், பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இல்லத்தரசிகள் பயன்படுத்தும் காய்கறிகளில், தக்காளி, வெங்காயம் ஆகியவை பிரதான இடம் வகிக்கின்றன.
இதற்கேற்றவாறு, பல்லடம் வட்டாரத்தில் தக்காளி, வெங்காயம் அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. ஆனால், இவற்றின் கொள்முதல் விலையில் ஏற்படும் மாற்றங்கள், விவசாயிகளை கவலை அடைய செய்கின்றனர்.
விலை உச்சத்தில் செல்வதை காட்டிலும், பெரும்பாலும் சரிவை சந்திப்பதே அதிகம். இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு, விளைவித்த காய்கறிகளை ரோட்டில் கொட்டுவதும், செடிகளிலேயே பறிக்காமல் விடுவதுமான செயல்களில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
சமீப நாட்களாக, 14 கிலோ கொண்ட தக்காளி டிப்பர் ஒன்றின் விலை, 90 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலை சரிவு காரணமாக, பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், தக்காளிகளை ரோட்டிலேயே கொட்டி செல்வது வாடிக்கையாகி விட்டது.
விலை அதிகரித்தால் மட்டுமே, இதற்கு தீர்வு கிடைக்கும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
ஆக்கிரமிப்பு அகற்றம்
திருப்பூர், ஆக. 25-
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பின், வடக்கு உழவர் சந்தை செயல்படுகிறது. நேற்று, வடக்கு தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர் பி.என்., ரோட்டில் இருந்து சந்தைக்கு செல்லும் வழியில், ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போதே, ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்றி மாநகராட்சி ஆட்டோ, லாரிகளில் எடுத்து சென்றனர். முன்னதாக, அதிகாரிகளின் இந்த செயல்பாடுகளை கண்ட ரோட்டோர தள்ளுவண்டி வியாபாரிகள் தங்கள் பொருட்களை வாடகை வாகனங்களை வரவழைத்து எடுத்து சென்றனர்.
தொழில்துறை நிகழ்ச்சியில் பங்கேற்க, திருப்பூர் வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று காலை உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொள் வருவார் என எதிர்பார்த்து, அதிகாரிகள் 'திடீர் அதிரடி'
நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X