தோல்வியை தவிர்க்க பெண்கள் டெக்னிக்| Dinamalar

தோல்வியை தவிர்க்க பெண்கள் 'டெக்னிக்'

Added : ஆக 25, 2022 | |
எஸ்.ஐ., தேர்வில் தோல்வியை தவிர்க்க, பெண்கள் புது 'டெக்னிக்'கை கையாண்டனர்.தமிழகத்தில், 444 எஸ்.ஐ., பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய, 5 மையங்களில், நேற்று முன்தினம் உடற்தகுதி தேர்வு தொடங்கியது. சேலம், திருச்சியில் பெண்களுக்கு தேர்வு நடந்தது. சேலத்தில், 413, திருச்சியில், 313 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் போலீஸ் துறையில் தற்போது பணியில் உள்ளவர்களுக்கான தேர்வு முடிந்தது.

எஸ்.ஐ., தேர்வில் தோல்வியை தவிர்க்க, பெண்கள் புது 'டெக்னிக்'கை கையாண்டனர்.
தமிழகத்தில், 444 எஸ்.ஐ., பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய, 5 மையங்களில், நேற்று முன்தினம் உடற்தகுதி தேர்வு தொடங்கியது. சேலம், திருச்சியில் பெண்களுக்கு தேர்வு நடந்தது. சேலத்தில், 413, திருச்சியில், 313 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் போலீஸ் துறையில் தற்போது பணியில் உள்ளவர்களுக்கான தேர்வு முடிந்தது. நேற்று பொதுப்பிரிவினருக்கு தேர்வு நடந்தது. அதில் சேலம் மையத்தில், 168 பேர், திருச்சியில், 132 பேர் பங்கேற்றனர். சேலம் மையத்தில் முதல் நாளில், 413 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 286 பேர் பங்கேற்றனர்; 127 பேர் வரவில்லை. இரண்டாம் கட்ட தேர்வுக்கு நேற்று, 171 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 168 பேர் பங்கேற்றனர். இதில், 127 பேர் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், 41 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வாகினர்.
நேற்று நடந்த உடற்தகுதி தேர்வில், நீளம் தாண்டுதலில் பலர் தோல்வி அடைந்தனர்.
அடுத்து கிரிக்கெட் பந்து எறிதல், 4 கிலோ குண்டு எறிதல் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம். குண்டு எறிதலை பொறுத்தவரை, 4.5 மீ., எறிந்தால் தேர்வு, 5.5 மீ., எறிந்தால், 5 மதிப்பெண் வழங்கப்படும். கிரிக்கெட் பால், 400 கிராம் கொண்டதை, 8 மீ., எறிந்தால் தேர்வு, 16 மீ., எறிந்தால், 5 மதிப்பெண் வழங்கப்படும்.
இதனால் பெண்களில், 90 சதவீதத்தினர், கிரிக்கெட் பந்து எரிவதை தேர்வு செய்தனர். நன்கு குண்டு எறியும் வீராங்கனைகள் கூட, தோல்வி யில் இருந்து தப்ப கிரிக்கெட் பந்து எறிவதை தேர்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'உடற்தகுதி தேர்வு எளிமைப்படுத்தப்பட்டு விட்டது. பங்கேற்போரும், 'ரிஸ்க்' எடுக்க விரும்புவதில்லை. ஆண்கள் உயரம் தாண்டுதலை தவிர்ப்பது போல், பெண்கள் குண்டு எறிவதை தவிர்க்கின்றனர்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X