சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சிந்தனையால் கருவிகளை இயக்கலாம்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
மனிதன் மூளைத் திறனை அதிகரிக்க உதவும் ஒரு சக்தி வாய்ந்த சில்லை உருவாக்க ஆராய்ந்து வருகிறது நியூராலிங்க் நிறுவனம். இதன் நிறுவனர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களை நடத்தும் அவர், அண்மையில், 'சிங்க்ரான்' என்ற போட்டி நிறுவனத்தின் தலைவருடன் பேச்சு வார்த்தையில் இறங்கியிருக்கிறார்.சிங்ரான் ஒரு சுவாரசியமான தொழில்நுட்பத்தில், வேகமாக முன்னேரி வருகிறது.
சிந்தனையால் கருவிகளை இயக்கலாம்

மனிதன் மூளைத் திறனை அதிகரிக்க உதவும் ஒரு சக்தி வாய்ந்த சில்லை உருவாக்க ஆராய்ந்து வருகிறது நியூராலிங்க் நிறுவனம்.

இதன் நிறுவனர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களை நடத்தும் அவர், அண்மையில், 'சிங்க்ரான்' என்ற போட்டி நிறுவனத்தின் தலைவருடன் பேச்சு வார்த்தையில் இறங்கியிருக்கிறார்.சிங்ரான் ஒரு சுவாரசியமான தொழில்நுட்பத்தில், வேகமாக முன்னேரி வருகிறது. மனித மூளையில் தோன்றும் எண்ணங்களை, ஒரு கணினி புரிந்துகொள்ளும் வகையில், மின் சமிக்ஞைகளாக மாற்றித் தரும் தொழில்நுட்பம்தான் அது.

'பிரெயின் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ்' எனப்படும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம், மனிதன் தன் எண்ணத்தின் மூலமே கருவிகளை இயக்கவும் நிறுத்தவும் முடியும்.இந்த நுட்பத்தையும் தன் நியூராலிங்க் சில்லுடன் இணைத்துவிட மஸ்க் நினைத்திருக்கலாம். அப்படி சிங்க்ரான் ஒப்புக்கொண்டால், நியூராலிங்க் விரைவில் மிக சக்தி வாய்ந்த திறன் மேம்பாட்டு சில்லு என்ற பெயரைப் பெற்றுவிடும்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில், சிங்க்ரானின் கருவிகள், விபத்தில் கை, கால் இழந்தோருக்கு, சிந்தனை மூலம் கருவிகளை இயக்கும் சோதனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X