8வது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிப்பு

Added : ஆக 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
வேலுார்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது தாய் பத்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமலிருந்தது. இதனால் தன்னை கவனித்துக் கொள்ள நளினிக்கு பரோல் வழக்கும்படி தமிழக அரசுக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் கோரிக்கையை ஏற்கப்பட்டு, கடந்த டிச., 23 ம் தேதி நளினிக்கு ஒரு மாதம் பரோல்
நளினி, முன்னாள் பிரதமர் ராஜிவ்,  தாய் பத்மா

வேலுார்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது தாய் பத்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமலிருந்தது. இதனால் தன்னை கவனித்துக் கொள்ள நளினிக்கு பரோல் வழக்கும்படி தமிழக அரசுக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் கோரிக்கையை ஏற்கப்பட்டு, கடந்த டிச., 23 ம் தேதி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.
இதனால் காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தாய் பத்மாவுடன் தங்கியிருந்தார். கடந்த சில மாதங்களாக பத்மா கோரிக்கை ஏற்கப்பட்டு நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நளினி இன்று(ஆக.,25) சிறைக்கு திரும்ப வேண்டியதிருந்தது. ஆனால் பத்மா கோரிக்கை ஏற்கப்பட்டு எட்டாவது முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் செப்., 24 ம் தேதி நளினி சிறைக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
25-ஆக-202219:47:17 IST Report Abuse
John Miller இதெற்கு கோர்ட்டிற்கு போகவில்லை. தமிழக அரசிற்கு கடிதம்தான் அனுப்பப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
25-ஆக-202218:05:15 IST Report Abuse
Girija இப்படி கோர்ட்டுக்கு அடிக்கடி ஏறி இறங்க ஏது காசு ? எங்கிருந்து வருகிறது ? குற்றம் செய்தவர்கள் மிகுந்த வசதியோடு இருக்கின்றனர் பாதிக்கப்பட்ட அப்பாவி காவல் துறையினர் குடும்பங்கள் பிச்சை எடுக்கிறது. வெளியே வந்த பேரறிவாளன் குத்தாட்டம் போடுகிறார். விடுதலை செய்ய மத்திய அரசுக்கு கண்டிப்பு காட்டிய தலைமை நீதிபதி அதற்கு பரிசாக திமுக எம்பியினால் ஆதிக்க வர்கம், அன் மை லார்ட் என்று சிறப்பிக்கப்பட்டார். ஆய்ந்தாய்ந்து அறியான் கேண்மை கடைமை தான்சன் தரும் துயரம் என்கிற திருக்குறளின் அர்த்தத்தை ஓய்வு பெரும் நேரத்தில் திமுகவிடம் இருந்து கற்றார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X