விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம்: குழந்தை இறந்து பிறந்த பரிதாபம்: தாயை விட்டு சிசு உடலுடன் பறந்த விமானம்

Updated : ஆக 25, 2022 | Added : ஆக 25, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: துருக்கியில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், அப்பெண்ணிற்கு குழந்தை இறந்து பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இறந்த சிசுவை விமானத்தில் இருந்து கீழிறக்க அதிகாரிகள் மறுத்ததால் பெண்ணை விட்டுவிட்டு சிசுவுடன் விமானம் மலேசியா சென்றுள்ளது.பொதுவாக விமான
சென்னை விமான நிலையம், பெண் பிரசவம், மலேசியா பயணம், Turkey Flight, Chennai Airport, துருக்கி விமானம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: துருக்கியில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், அப்பெண்ணிற்கு குழந்தை இறந்து பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இறந்த சிசுவை விமானத்தில் இருந்து கீழிறக்க அதிகாரிகள் மறுத்ததால் பெண்ணை விட்டுவிட்டு சிசுவுடன் விமானம் மலேசியா சென்றுள்ளது.

பொதுவாக விமான பயணத்தின்போது, விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ, பயணிகளுக்கு அவசர கால உதவி அல்லது சிகிச்சை தேவைப்பட்டாலோ அருகில் இருக்கும் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்படும். அந்த வகையில் துருக்கியில் இருந்து மலேசியாவிற்கு 326 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் மருத்துவ அவசரத்திற்காக சென்னையில் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்த மருத்துவக் குழு விமானத்தின் உள்ளே சென்று அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்த நிலையில், பெண்ணிற்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்தது.


latest tamil news


ஆனாலும், இறந்த சிசுவை விமானத்தில் இருந்து இறக்க அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. சில சட்ட சிக்கல்கள் காரணமாக சிசுவை கீழே இறக்க மறுத்துவிட்டனர். இதனால் இறந்த சிசு விமானத்தில் பாதுகாப்பாக மலேசியாவிற்கு எடுத்து செல்லப்பட்டது.
அப்பெண் மற்றும் உடன் வந்த ஒருவருக்கு அவசர கால மருத்துவ விசா வழங்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-செப்-202205:52:02 IST Report Abuse
D.Ambujavalli ஒருவேளை குழந்தை a குறைப்பிரசவமாக இருந்திருக்கலாம்
Rate this:
Cancel
Vela - Kanchipuram,இந்தியா
25-ஆக-202220:20:26 IST Report Abuse
Vela பிரசவம் விமானத்தில் பார்த்தார்களா? இந்தியாவுக்கு அதுவும் சென்னைக்கு மிகவும் அசிங்கம். இந்த துரித விசா என்ன முதல்லியே கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கலாம். குழந்தையை தாயிடமிருந்து பிரிக்கவேண்டி தேவை இல்லை.
Rate this:
Abdul Rahman - Madurai,இந்தியா
26-ஆக-202201:08:46 IST Report Abuse
Abdul Rahmanவிமான நிலையத்தில் இருந்து மருத்துவமனை கொண்டு செல்ல நேரம் இருந்திருக்காது....
Rate this:
Cancel
25-ஆக-202219:32:56 IST Report Abuse
அப்புசாமி நிறைமாத கர்ப்பிணி விமானத்தில் அதுவும்.இண்டர் நேஷனல் பயணம் செல்லலாமா?
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
26-ஆக-202200:32:59 IST Report Abuse
Fastrackநீங்களே சொல்லுங்க ..பயணிக்கலாமா கூடாதா ......
Rate this:
Abdul Rahman - Madurai,இந்தியா
26-ஆக-202201:10:13 IST Report Abuse
Abdul Rahmanநிறைமாத கர்ப்பிணியை விமானத்தில் எப்படி அனுமதித்தார்கள். 6 மாத கர்ப்பத்திற்கு பிறகு விமானத்தில் அனுமதிக்க மாட்டார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X