எரிந்த நிலையில் சடலம் மீட்பில் திடீர் திருப்பம்: வீட்டில் இருந்த நான்கு பேரின் கதி?

Added : ஆக 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திருப்பூர்:திருப்பூரை அடுத்த பொங்குபாளையத்தில் உள்ள காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. 15 வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர்.அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவில், நள்ளிரவு, 12:00 மணியளவில் டூவீலரில் ஒருவர், சடலத்தை மூட்டையாக கட்டி கொண்டு வந்து சென்றது தெரிந்தது. இதன் தொடர்ச்சியாக அந்த பகுதியை சுற்றியுள்ள அண்ணா நகர், பாண்டியன் நகர்,
எரிந்த நிலையில் சடலம் மீட்பில் திடீர் திருப்பம்:  வீட்டில் இருந்த நான்கு பேரின் கதி?

திருப்பூர்:திருப்பூரை அடுத்த பொங்குபாளையத்தில் உள்ள காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. 15 வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர்.

அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவில், நள்ளிரவு, 12:00 மணியளவில் டூவீலரில் ஒருவர், சடலத்தை மூட்டையாக கட்டி கொண்டு வந்து சென்றது தெரிந்தது. இதன் தொடர்ச்சியாக அந்த பகுதியை சுற்றியுள்ள அண்ணா நகர், பாண்டியன் நகர், பெருமாநல்லுார் உள்ளிட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டு விசாரித்தனர்.


காட்டி கொடுத்த நாய்


சடலம் கிடந்த இடத்தில் இருந்து, இரண்டு கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள அண்ணாநகர், தியாகி குமரன் காலனி வீதிகளில், மூட்டையுடன் சென்ற டூவீலர் நபர் குறித்து தெரிந்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள அனைத்து வீதிகளில் போலீசார் விசாரித்தனர்.

அதில், 3வது வீதியில் சுற்றியும் கம்பி வேலி போடப்பட்டு, உள்ளே தனியாக இருந்த ஓட்டு வீட்டுக்கு அருகே நாய் ஒன்று குரைத்து கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர். இதுதொடர்பாக, அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

அதில், ஐந்து பேர் வசிப்பதும், இரு நாட்களாக யாரும் இல்லை என்பது தெரிந்தது. வீட்டின் உரிமையாளர் குறித்து கேட்டனர். ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., சக்திவேல் என்பவரின் வீடு என்பது தெரிந்தது. அவரை அழைத்து கொண்டு, பூட்டியிருந்த வீட்டுக்கு சென்ற போது, கடும் துர்நாற்றம் வீசியது. உடனடியாக, உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.


வீட்டுக்குள் தோண்டப்பட்ட குழி


இதையடுத்து, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர் அபினவ்குமார் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்தனர். வீட்டை திறந்து பார்த்த போது, வீட்டுக்குள் குழி தோண்டி, மூடப்பட்டு இருந்தது தெரிந்தது. வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆர்.டி.ஓ., வடக்கு தாசில்தார் ஆகியோர் விரைந்து வந்தனர். மாலை, 5:00 மணிக்கு வருவாய்த்துறையினர் முன்னிலையில் குழி தோண்டும் பணி துவங்கியது. தோண்ட, தோண்ட கடும் துர்நாற்றம் வீசியது.


சிக்கிய தோல்நான்கு மணி நேரமாக தோண்டப்பட்ட குழிக்குள், உள்ளங்கையின் மேற்புறமாக உள்ள தோல் மற்றும் மொபைல் போன் மட்டும் சிக்கியது, மற்றபடி எந்த சடலமும் மீட்கப்படவில்லை.


கள்ளக்காதல் விவகாரம்இதுகுறித்து போலீசார் கூறியதாவது:வீட்டில் சிவகாசியை சேர்ந்த மணிகண்டன், 36, அபிராமி, 28, சத்யா, 8, மகேஸ்வரி, 10 மற்றும் அபிராமியின் தாயார் பஞ்சவர்ணம், 48 என்பவர் இருந்தனர். கடந்த, நான்கு மாதங்கள் முன்பு, இந்த வீட்டுக்கு வந்தனர். மணிகண்டன் பழைய பொருட்களை பெற்று, பிளாஸ்டிக் பொருட்களை தள்ளுவண்டியில் விற்று வந்தார்.

முதல் கணவரான பரமசிவம் என்பவரை விட்டு, விட்டு குழந்தைகளை அழைத்து கொண்டு கள்ளக்காதலன் மணிகண்டன் உடன் வாழ்ந்து வந்தது தெரிந்தது.

கடந்த, 20 ம் தேதி முதல், இரு குழந்தைகளையும், அபிராமியும் அக்கம்பக்கத்தினர் பார்க்கவில்லை. 24ம் தேதி காலை பஞ்சவர்ணம் வெளியே கிளம்பி சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்த அனைத்து சம்பவங்களையும் பார்க்கும் போது, கணவர் அல்லது கள்ளக்காதலனை அடித்து, கொன்று வீட்டுக்குள் புதைத்து வைத்திருக்க வேண்டும். துர்நாற்றம் வீச துவங்கியுடன் 23ம் தேதி இரவு தோண்டி எடுக்கப்பட்டு, டூவீலரில் எடுத்து சென்று எரித்திருக்க வேண்டும். தற்போது, கொல்லப்பட்டது கணவரா அல்லது, கள்ளக்காதலனா என்பது தெரியவில்லை. தலைமறைவாக உள்ள, நான்கு பேரின் நிலைமையும் தெரியவில்லை. இவர்களை பிடிக்கும் பட்சத்தில் உண்மை தெரிய வரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


மனைவி காணவில்லை


முதல் கணவரான பரமசிவம் கடந்த ஆண்டு மனைவி, குழந்தைகளை காணவில்லை என்று சிவகாசி போலீசில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து மனைவியை தேடி வந்தார். ஒருவேளை, திருப்பூரில் இருப்பதை கணவர் தெரிந்து கொண்டு, தகராறு செய்திருக்கலாம். இதில் ஏற்பட்ட பிரச்னையில் கணவரை அல்லது கள்ளக்காதலன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.


வருவாய்த்துறையினர் தாமதம்


வீட்டுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்த கமிஷனர் தலைமையிலான போலீசார், 3 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்தனர். வருவாய்த்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டும், இரண்டு மணி நேரம் கழித்தே ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் வந்தனர். இதன் காரணமாக தோண்டும் பணி தாமதமானது. இதனால், சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் திரண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-ஆக-202206:23:58 IST Report Abuse
D.Ambujavalli ஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு விதமாக ஒளிர்கிறது நல்லாட்சியில்
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
26-ஆக-202202:16:11 IST Report Abuse
கதிரழகன், SSLC பாபநாசம் பாத்த அப்புறமும் புத்தி வல்லைன்னா உலக்கை நாயகர் என்ன செய்வாரு? வீட்டுக்குள்ள கண்ணு குட்டிய பொதச்சு பொணத்த போலீஸ் ஸ்டேஷன் கீழே பொதைக்கணும். இது கூட தெரியாம என்ன செய்யுராக?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X