சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஆக 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று இங்கு வந்திருப்பவரால், ஒருவரை குற்றவாளி ஆக்கவும் முடியும். குற்றவாளி பட்டியலில் இருந்து எடுக்கவும் தெரியும். அவர் எங்களுடன் வளர்ந்தவர்' என, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு, கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். காவல் துறையினர் எப்படி செயல்படுகின்றனர் என்பதை ஒரே வரியில் உரைத்து,


பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று இங்கு வந்திருப்பவரால், ஒருவரை குற்றவாளி ஆக்கவும் முடியும். குற்றவாளி பட்டியலில் இருந்து எடுக்கவும் தெரியும். அவர் எங்களுடன் வளர்ந்தவர்' என, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு, கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். காவல் துறையினர் எப்படி செயல்படுகின்றனர் என்பதை ஒரே வரியில் உரைத்து, கழக அரசியல் காவல் துறையை சீரழித்த வரலாற்றை சுருக்கமாக சொல்லி விட்டார். அவர் பேசும்போது, கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது என்பதே, திராவிட மாடலின் அவலம்.நேரு எப்பவுமே இப்படித்தான்... 'வெள்ளந்தி'யா பேசுறதா நினைச்சு, தங்களது வண்டவாளங்களையே தண்டவாளத்துல ஏத்திடுவார்!


அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி:
அரசியல் ரீதியாக, யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது. பழனி சாமியின் குணாதிசயங்களைத் தான் திரும்ப திரும்ப கண்டிக்கிறேனே தவிர, மற்ற தனிப்பட்ட விரோதம் கிடையாது. யார், எந்த தவறு செய்தாலும் மன்னித்து விடலாம். நம்பிக்கை துரோகம் என்பது, அருவருக்கத்தக்க செயல். அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு.தங்களை, 'நம்பி' வந்த பலர் இப்ப எங்கே இருக்காங்க...? அவங்களுக்கு நீங்க செஞ்சது என்னவாம்?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: நீதிமன்ற தீர்ப்பால், அ.தி.மு.க., பின்னடைவை சந்தித்ததாக ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். உண்மையில், அ.தி.மு.க.,விற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் தளும்பும் என்பதை போல, அங்கு இருக்கக் கூடியவர்கள் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அது, வரவேற்பு பெறவில்லை. மக்கள் முகம் சுளிப்பதாகத் தான் இருக்கிறது.இதைத்தான், 'கீழே விழுந்தாலும், மீசையில மண் ஒட்டலை'ன்னு சொல்லுவாங்களோ?


ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை:
சென்னை, ஆலந்துார் மெட்ரோ துாண்களில் வரையப்படும் புகழ் பெற்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கண்கவர் ஓவியங்களில், சைவ அடையாளங்களை அழித்து, வெறும் நெற்றியோடு வரையும் திராவிட மாடல் அரசு, சமய அடையாள அழிப்பை செய்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.அந்த மன்னர்கள் கட்டிய கோவில்கள், இன்றும் நம் கண்முன் சாட்சியாக இருக்கிறதே... ஓவியங்களில் அடையாளத்தை அழித்தால், அவை எல்லாம் பொய்யாகி விடுமா, என்ன?

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி, இரு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இதுவரை, 20 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயத்தில், பள்ளிக்கல்வித் துறை காட்டும் அலட்சியம் பெரும் வேதனையும், ஏமாற்றமும் அளிக்கிறது.'கோர்ட்டில் வழக்கு இருப்பதால் தான் தாமதம்' என, அமைச்சர் மகேஷ் சொல்லி இருப்பதை, தாங்கள் கவனிக்கவில்லையா?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
26-ஆக-202218:13:26 IST Report Abuse
Anantharaman Srinivasan பல நூறு உண்மைகள் வெளிவரும்.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
26-ஆக-202218:11:05 IST Report Abuse
Anantharaman Srinivasan நேருவுக்கு உண்மையை கண்டறியும் சோதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X