வெங்காய பட்டறை மானியம் புறநகர் பகுதிக்கு குறைவு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
பொங்கலுார் : சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை வீழ்ச்சி ஏற்படும் சமயங்களில் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். வெங்காயத்தை சேமித்து வைத்து அறுவடை முடிந்து சில மாதங்கள் கழித்து விற்பனை செய்தால் விலை உயரும். இதற்காக பட்டறை அமைக்க இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் பட்டறை அமைக்க, 87,500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்

பொங்கலுார் : சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை வீழ்ச்சி ஏற்படும் சமயங்களில் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

வெங்காயத்தை சேமித்து வைத்து அறுவடை முடிந்து சில மாதங்கள் கழித்து விற்பனை செய்தால் விலை உயரும். இதற்காக பட்டறை அமைக்க இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் பட்டறை அமைக்க, 87,500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் கிராமங்களுக்கு, 80 சதவீதம் வழங்கப்படுகிறது. வெங்காயம், பொங்கலுார், காங்கயம், உடுமலை, வெள்ளகோவில் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் தான் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

புறநகர் பகுதிகளான வெள்ளகோவில், காங்கயம் ஒன்றியங்களுக்கு தலா மூன்று பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பொங்கலுார் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் அதிக ளவில் சாகுபடி செய்யப்படுவதால், 25 பேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சி நிறைந்த திருப்பூர் ஒன்றியத்தில், 15 பேருக்கு வழங்கப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், ''புறநகர் பகுதிகளுக்கு பட்டறை அமைக்க கூடுதல் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்'' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X