ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பால் அதிருப்தி; அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி

Added : ஆக 25, 2022 | |
Advertisement
வால்பாறை : வால்பாறையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்ற, அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.வால்பாறைக்கு ஒரே ஒரு வழித்தடம் மட்டுமே உள்ளது. அதுவும், நகரப்பகுதியில் ரோடு விரிவாக்கம் செய்யப்படாமல் குறுகலாக உள்ளது. சுற்றுலா பயணியரின் வாகனங்களும், கடைகளுக்கு வரும் மக்களின் வாகனங்களும், ரோட்டோரத்தில் தான்
ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பால் அதிருப்தி; அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி

வால்பாறை : வால்பாறையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்ற, அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

வால்பாறைக்கு ஒரே ஒரு வழித்தடம் மட்டுமே உள்ளது. அதுவும், நகரப்பகுதியில் ரோடு விரிவாக்கம் செய்யப்படாமல் குறுகலாக உள்ளது. சுற்றுலா பயணியரின் வாகனங்களும், கடைகளுக்கு வரும் மக்களின் வாகனங்களும், ரோட்டோரத்தில் தான் நிறுத்தப்படுகின்றன.இதுதவிர, வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் காந்திசிலை வரையிலும், சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளும் நிறைந்துள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து, மக்கள் கூறியதாவது:வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், சிலர் அத்துமீறி கடைகள் வைத்துள்ளதாலும், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மக்கள் நடந்து செல்லும் வழியில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள் இணைந்து, ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதையும் தடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


'பார்க்கிங்' இல்லை


வால்பாறையில், டூரீஸ்ட் கார், வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர்.குறிப்பாக, சுற்றுலா பயணியர் வந்து செல்லும் நாட்களில் அதிக அளவில் வாகனங்கள் வருவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நகராட்சி சார்பில் வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும்.

'பார்க்கிங்' ஆன கோவில் வீதி

வால்பாறை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில், போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மிகவும் குறுகலான இடத்தில், நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.இதேபோல், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் ரோட்டை ஆக்கிரமித்து, நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்தும் ஏற்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்கு நிம்மதியாக சென்று வர முடியாத அளவுக்கு, ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் நலன்கருதி, வால்பாறையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை, போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X