குறுமைய போட்டிகள் சனிக்கிழமை நடத்த தடை

Added : ஆக 25, 2022 | |
Advertisement
திருப்பூர் : கடந்த 17ம் தேதி முதல், திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், பல்லடம், உடுமலை ஆகிய ஐந்து குறுமையங்களில் குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. அரசு, அரசு உதவி பெறும், தனியார், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.தொடர்ந்து, செப்., இரண்டாவது வாரம் வரை போட்டிகள் நடக்கவுள்ளது. வரும் 30ம் தேதிக்கு பின்

திருப்பூர் : கடந்த 17ம் தேதி முதல், திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், பல்லடம், உடுமலை ஆகிய ஐந்து குறுமையங்களில் குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

அரசு, அரசு உதவி பெறும், தனியார், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.தொடர்ந்து, செப்., இரண்டாவது வாரம் வரை போட்டிகள் நடக்கவுள்ளது. வரும் 30ம் தேதிக்கு பின் தனிநபர், தடகள போட்டிகள் துவங்குகிறது. குறுமைய பள்ளிகளுக்கான அட்டவணை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, சனிக்கிழமையென அறிவிக்கப்பட்டுள்ள போட்டிகள் வேறு ஒரு நாளில் நடக்குமென தெரிவித்துள்ளது

.உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளி விடுமுறை நாட்களில், பள்ளிகளில் விளையாட்டு சார்ந்த எந்த நிகழ்ச்சியும் நடைபெற கூடாது என கல்வித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. அதனால், சனிக்கிழமை நடத்த திட்டமிட்டிருந்த போட்டிகள் மட்டும், வேறு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X