'நிட்டிங்' சேவை மையம் துவக்கம்! ஊக்கத்தொகையுடன் பயிற்சி வழங்க திட்டம்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
திருப்பூர் : பல்லடம் அருகே நாரணாபுரத்தில், நிட்டிங் பொது பயன்பாட்டு சேவை மையம் நேற்று முதல் தனது இயக்கத்தை துவக்கியுள்ளது. ''தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்; இதன் மூலம், திறன் மிக்க தொழிலாளரை பணி அமர்த்த முடியும்'' என்று இந்த மைய நிர்வாக இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்தார்.பல்லடம் அருகே நாரணாபுரத்தில், 15.35 கோடி ரூபாய் மதிப்பில்,
'நிட்டிங்' சேவை மையம் துவக்கம்! ஊக்கத்தொகையுடன் பயிற்சி வழங்க திட்டம்

திருப்பூர் : பல்லடம் அருகே நாரணாபுரத்தில், நிட்டிங் பொது பயன்பாட்டு சேவை மையம் நேற்று முதல் தனது இயக்கத்தை துவக்கியுள்ளது. ''தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்; இதன் மூலம், திறன் மிக்க தொழிலாளரை பணி அமர்த்த முடியும்'' என்று இந்த மைய நிர்வாக இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்தார்.

பல்லடம் அருகே நாரணாபுரத்தில், 15.35 கோடி ரூபாய் மதிப்பில், நிட்டிங் பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், திருப்பூரை சேர்ந்த, 40 நிட்டிங் நிறுவனத்தினரை ஒருங்கிணைத்து, மத்திய, மாநில அரசு மானியத்துடன், தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா) இம்மையத்தை உருவாக்கியுள்ளது.திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நேற்று நடந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், விழா மேடையில் இருந்தவாறு, காணொலி மூலம் மையத்தை திறந்து வைத்தார். பொது பயன்பாட்டு மைய நிர்வாக இயக்குனர் விவேகானந்தன், இயக்குனர் சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து, பொதுபயன்பாட்டு மையம் செயல்பாட்டை துவக்கியுள்ளது.

விவேகானந்தன் கூறியதாவது:பொதுபயன்பாட்டு மையத்தில், தைவான், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய காலர் நிட்டிங், சர்க்குலர் நிட்டிங் மெஷின்கள் நிறுவப்பட்டுள்ளன. திருப்பூரில் பத்தாயிரம் நிட்டிங் நிறுவனங்கள் உள்ளன.ஹெல்பர், ஆபரேட்டர், போர்மேன், சர்வீஸ் இன்ஜினியர், டெக்னீஷியன் என ஐந்து வகை பணியிடங்கள் உள்ளன. பொதுபயன்பாட்டு மையத்தில், தொழிலாளர்களுக்கு இப்பிரிவுகளில், ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி முடிப்போருக்கு, அரசு அதிகாரிகள் அங்கீகாரத்துடன் கூடிய சான்று மற்றும் நிட்டிங் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு அளிக்கப்படும். திறன்மிக்க தொழிலாளரை பணி அமர்த்துவதன் மூலம், நிட்டிங் துறை மேலும் பலம் பெறும்.அதிநவீன நிட்டிங் மெஷின்களை பயன்படுத்தி, டெனிம், புள்பாடி கார்மென்ட், தொழிற்சாலை பயன்பாட்டு கிளவுஸ் என பல்வேறுவகை மதிப்பு கூட்டு ஆடை ரகங்கள் தயாரிக்கப்படும். பொதுபயன்பாட்டு மைய உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து ஆடை உற்பத்தி துறையினரும் இம்மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இம்மையத்தால், பின்னலாடை துறையின் லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை நோக்கிய பயணம் அதிவேகம் பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X