அம்பத்தூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்:கலெக்டர்களுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
சென்னை:சுற்றுச்சூழலை பாதுகாக்க நீர்நிலைகளை பாதுகாப்பது அவசியம் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, அம்பத்துார் ஏரி, கழிவு நீரால் மாசடைந்து வருவது குறித்தும், ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பு குறைந்து வருவது குறித்தும், கடந்த -2020-ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.நடவடிக்கைஅதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த

சென்னை:சுற்றுச்சூழலை பாதுகாக்க நீர்நிலைகளை பாதுகாப்பது அவசியம் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, அம்பத்துார் ஏரி, கழிவு நீரால் மாசடைந்து வருவது குறித்தும், ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பு குறைந்து வருவது குறித்தும், கடந்த -2020-ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.நடவடிக்கைஅதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:அம்பத்துார் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆக்கிரமிப்புகளை தவிர்க்க, ஏரிக்கரைகளில் மரங்களை நட்டு, உயிர்வேலி, பல்லுயிர் பூங்கா அமைக்க வேண்டும்.

சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், ஏரியில் விடப்படுவதை தடுக்க, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும்.வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள், பாதாள சாக்கடை பணிகளை முடிக்க வேண்டும். ஏரிக்குள் குப்பை கொட்டுவோர் மீது சுற்றுச்சூழல் இழப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நிதி பற்றாக்குறையால் பணிகள் முடங்காமல் இருக்க, நகராட்சி நிர்வாக துறை செயலர் தலைமையில், நிதி துறை செயலர் அல்லது அவர் பரிந்துரைக்கும் அதிகாரி, நீர்வளம், வருவாய் துறை செயலர்கள் கொண்ட குழுவை, தலைமை செயலர் அமைக்க வேண்டும். பாதுகாப்பு அவசியம்கழிவு மேலாண்மை விதிகள் அமல்படுத்தப்படுவதையும், தீர்ப்பாயத்தின் உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதையும் இக்குழு கண்காணிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில், நீர்நிலைகள் முக்கிய பங்காற்றுகின்றன என்பது உலகம் அறிந்த உண்மை. மழை காலங்களில் வெள்ள பாதிப்பை தடுக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் நீர் நிலைகள் தான் காரணம். எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வீராங்கால் கால்வாய்



வேளச்சேரி வீராங்கால் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் இருந்து உருவாகும் வாயுவால், அப்பகுதி மக்கள் சுவாச பிரச்னையால் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து -2020-ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், வேளச்சேரி ஏரி மற்றும் அதன் நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஏரி, கால்வாய்களில் கழிவு நீர் கலப்பது, குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து முறையாக பராமரிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X