சர்வதேச தரத்தில் சிங்கார சென்னை...17 திட்டங்கள்!: வட சென்னைக்கு முக்கியவத்துவம்

Added : ஆக 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை மாநகராட்சியை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் வகையில், 'சிங்கார சென்னை 2.0 திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, 17 திட்டங்களை வகுத்து, அழகாக்கும் பணிகளை மேற்கொள்ள, பொதுமக்களிடம் மாநகராட்சி கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெற உள்ளது. இதில், வட சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னையை சர்வதேச தரத்தில்
  சர்வதேச தரத்தில் சிங்கார சென்னை...17 திட்டங்கள்!: வட சென்னைக்கு முக்கியவத்துவம்

சென்னை மாநகராட்சியை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் வகையில், 'சிங்கார சென்னை 2.0 திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, 17 திட்டங்களை வகுத்து, அழகாக்கும் பணிகளை மேற்கொள்ள, பொதுமக்களிடம் மாநகராட்சி கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெற உள்ளது. இதில், வட சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணியை, சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சாலை நடுவே பூங்கா அமைத்தல், பூச்செடிகள் வைத்தல், அரசியல் கட்சிகளின் சுவர் ஓவியங்களை அழித்து, கலாசார வண்ண ஓவியங்கள் வரைதல், போஸ்டர் ஒட்ட தடை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவற்றில் பல பணிகள் ஏறத்தாழ முடிந்து, அண்ணா நகர் ரவுண்டானா, கிண்டி கத்திபாரா உள்ளிட்ட பகுதிகள் மக்களை கவரும் வகையில் உள்ளது.


இந்நிலையில், சென்னையின் அனைத்து பகுதிகளையும் சர்வதேச தரத்தில் உயர்த்துவது குறித்த ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில் மாநகராட்சி உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் கழிப்பறைகள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்கள் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில், மெரினா கடற்கரையில் உள்ளதைப் போன்ற கழிப்பறைகள், மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது.


இந்த கழிப்பறைகளை அமைக்க ஒப்பந்தம் பெறும் தனியார் நிறுவனங்கள், கழிப்பறை கட்டட சுவர்களில் விளம்பரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படும். மேலும், கழிப்பறையை பராமரிப்பதற்கான செலவை மாநகராட்சி செலவிடுவதால், பொதுமக்களுக்கு சர்வதேச தரத்தில் நவீன கழிப்பறை வசதியை இலவசமாக ஏற்படுத்தி தர முடியும். தற்போது, 260க்கும் மேற்பட்ட கழிப்பறைகள், 36 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இவை, நவீன கழிப்பறையாக அமைக்கப்படும்.
வடசென்னை பகுதிகளில் அதிகளவில் பூங்கா இல்லாத நிலை உள்ளது. அங்கு, பொது இடங்களை கண்டறிந்தும், எங்கெல்லாம் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து, அமைக்கப்படும்.


தற்போது வடசென்னை பகுதியில் 5 கோடி ரூபாய் செலவில் மிண்ட் பூங்கா; 2 கோடி ரூபாய் செலவில் மாடி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் ராயப்பேட்டை, புளியந்தோப்பு, கண்ணாமபேட்டை பகுதிகளில் நாய்கள் கருத்தடை மையம் உள்ளது. அவற்றில் மேலும் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து, நாய்கள் ஆர்வலர்களிடம் ஆலோசனை பெற்று பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்று மையங்கள் அமைக்க, தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
வடசென்னையில் வால்டாக்ஸ் சாலை, வியசார்பாடி சுரங்கப்பாதை பகுதிகளில் பூங்கா அமைத்தல், பூச்செடிகள் வைத்து அழகுப்படுத்துதல், சாலையில் துாசி படியாமல் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு, பிளாஸ்டிக் மாசில்லாத பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், அக்கரை ஆகிய கடற்கரைகளை மேலும் அழகு படுத்துல், பொதுமக்களுக்கான வசதிகள் மேம்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நமக்கு நாமே திட்டத்தின் கீழ், நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு வரும் சூழலில், குளங்கள், விளையாட்டு மைதானம், பூங்கா, பொது இடங்கள் என தலா 5 இடங்களை, பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து, மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், வாரந்தோறும் சாலைகளில், தமிழகம் மற்றும் சென்னையின் கலச்சாரத்தை பிரதிப்பலிக்கும் வகையில் கலச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மாம்பலம் கால்வாய் போல், சென்னையின் பல கிளை கல்வாய்களை துார்வாரி சீரமைக்கப்பட உள்ளது.மேலும், மாநகராட்சியிடமிருந்து மக்களுக்கு தேவையான ஆன்லைன் சேவைகள், மருத்துவமனைகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட 17 திட்டங்கள், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
26-ஆக-202216:33:06 IST Report Abuse
K.P  SARATHI உலகத்தரம் ஆக்கப்பட்டால் நடுத்தரமக்கள் மற்றும் ஏழைகள் சென்னையை விட்டு வெளிய செல்ல வேண்டியதுதான். தயவு செய்து அப்படியே விட்டு விடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X