மணலி பேருந்து நிலையம் எப்போது இடம் மாறும்?

Added : ஆக 25, 2022 | |
Advertisement
மணலி, மணலி பேருந்து நிலையத்தை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றுவதற்கு கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை, மணலி பேருந்து நிலையம், நெடுஞ்செழியன் தெரு, அய்யப்பன் கோவில் அருகே செயல்பட்டு வந்தது. இங்கிருந்து, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், நெடுஞ்செழியன் தெரு, பாடசாலை தெருவில் பாதாள சாக்கடை மற்றும் குழாய்


மணலி, மணலி பேருந்து நிலையத்தை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றுவதற்கு கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை, மணலி பேருந்து நிலையம், நெடுஞ்செழியன் தெரு, அய்யப்பன் கோவில் அருகே செயல்பட்டு வந்தது. இங்கிருந்து, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், நெடுஞ்செழியன் தெரு, பாடசாலை தெருவில் பாதாள சாக்கடை மற்றும் குழாய் பதிப்புகள் நடைபெறுவதால், காமராஜர் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரேயுள்ள தொழிற்பேட்டை மைதானத்திற்கு பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டது.திறந்தவெளி காலி மைதானம் என்பதால், பயணியர் வெட்ட வெளியில், பேருந்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் கடும் அவதியுறுகின்றனர்.பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, புதிய பேருந்து நிலையம் வருவதற்கு, ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஒரு கி.மீ., துாரத்திற்கு, நடந்தே செல்ல வேண்டியுள்ளது.எனவே, பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து, பழைய இடத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால், பேருந்து நிலையம் மாற்றப்படவில்லை.இதனால், பயணியர் கடும் அலைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பணிகளை முடித்து, பேருந்து நிலையத்தை உடனடியாக பழைய இடத்திற்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X