கேம்ப் சாலையில் திணறும் பாதசாரிகள் போலீசார் நடவடிக்கை எடுப்பரா?

Added : ஆக 25, 2022 | |
Advertisement
தாம்பரம், கேம்ப் சாலை சந்திப்பில், சாலையை கடக்க வசதியில்லாததால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தென் சென்னை புறநகர் பகுதிகளை, சென்னை மாநகருடன் இணைக்கும், முக்கிய சாலையாக, தாம்பரம் - வேளச்சேரி சாலை உள்ளது.இச்சாலையின், கேம்ப் சாலை சந்திப்பு, தாம்பரம் மாநகராட்சியை ஒட்டிய, கிராம ஊராட்சிகளை இணைக்கும், சந்திப்பாக உள்ளது.தினசரி, லட்சக்கணக்கான வாகனங்கள்



தாம்பரம், கேம்ப் சாலை சந்திப்பில், சாலையை கடக்க வசதியில்லாததால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தென் சென்னை புறநகர் பகுதிகளை, சென்னை மாநகருடன் இணைக்கும், முக்கிய சாலையாக, தாம்பரம் - வேளச்சேரி சாலை உள்ளது.இச்சாலையின், கேம்ப் சாலை சந்திப்பு, தாம்பரம் மாநகராட்சியை ஒட்டிய, கிராம ஊராட்சிகளை இணைக்கும், சந்திப்பாக உள்ளது.தினசரி, லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இச்சாலை சந்திப்பில், பாதசாரிகள் சாலையை கடந்து செல்வதற்கு ஏற்ப, போதிய குறியீடுகள் இல்லை.குறியீடுகள் இல்லாதது குறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை, போக்கு வரத்து போலீசாரிடம் தெரிவித்தும், அவர்கள், நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.இதனால், காலை, மாலை நேரங்களில் 'பீக் -ஹவர்'களில், சாலையை கடக்கும்போது, பாதசாரிகள் விபத்தில் சிக்கும், நிலை ஏற்பட்டு உள்ளது.தாம்பரம் போலீஸ் ஆணையரக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் கவனித்து, கேம்ப் சாலை சந்திப்பில், பாதசாரிகள் சாலையை கடக்க, குறியீடுகள் வரைய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X