588 கிலோ கஞ்சா சிக்கியது கடத்திய எட்டு பேர் கைது

Added : ஆக 25, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்:ஆந்திராவில் இருந்து லாரியில் கஞ்சா கடத்தி வந்த எட்டு பேரை கைது செய்த போலீசார், 588 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்களிடம் புழக்கத்தில் விடுவதாக, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., கயல்விழிக்கு புகார் வந்தது.இதையடுத்து, மாவட்டம் முழுதும், தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
588 கிலோ கஞ்சா சிக்கியது கடத்திய எட்டு பேர் கைது

தஞ்சாவூர்:ஆந்திராவில் இருந்து லாரியில் கஞ்சா கடத்தி வந்த எட்டு பேரை கைது செய்த போலீசார், 588 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்களிடம் புழக்கத்தில் விடுவதாக, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., கயல்விழிக்கு புகார் வந்தது.இதையடுத்து, மாவட்டம் முழுதும், தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பேராவூரணி அருகே, பின்னவாசலில் சந்தேகப்படும்படி நின்ற இருவரை, பேராவூரணி போலீசார் பிடித்து விசாரித்தனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார், 40, தேனியைச் சேர்ந்த படையப்பா, 24, பின்னவாசல் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம், 50, ஆகியோர், லோடு ஆட்டோ மற்றும் லாரியில், 460 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதே போல், ரயில்வே குட்ஷெட் எடை மேடை அருகே, இரண்டு லாரிகளில், கஞ்சா பொட்டலங்களை ஏற்றிக் கொண்டிருந்த கும்பலை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர்கள், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த அசாருதீன், 19, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த ஆசிப்ராஜா, 25, உட்பட ஐந்து பேரை மடக்கி பிடித்த போலீசார், 128 கிலோ கஞ்சாவையும், லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X