இலவச சைக்கிள் வழங்கும் விழா

Added : ஆக 25, 2022 | |
Advertisement
செஞ்சி-வல்லம் ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.வல்லம் ஒன்றியம் மேல் சித்தாமூர், வீரணாமூர், மேல் ஒலக்கூர், நெகனுார், இல்லோடு ஆகிய அரசு மேல் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.வீரணாமூர் பள்ளியில் நடந்த விழாவிற்கு, வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை
இலவச சைக்கிள் வழங்கும் விழா



செஞ்சி-வல்லம் ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.வல்லம் ஒன்றியம் மேல் சித்தாமூர், வீரணாமூர், மேல் ஒலக்கூர், நெகனுார், இல்லோடு ஆகிய அரசு மேல் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.வீரணாமூர் பள்ளியில் நடந்த விழாவிற்கு, வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் செந்தில் வேலவன், நித்திய வள்ளி, பழனிவேல், நெடுஞ்செழியன், மோகன் குமார் வரவேற்றனர்.சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.ஒன்றிய செயலாளர்கள் அண்ணா துரை, துரை, இளம்வழுதி, ஒன்றிய கவுன்சிலர்கள் லட்சுமி லட்சுமணன், ஜெயலலிதா புருஷோத்தமன், ராஜேந்திரன், பிரபாகரன், பத்மநாபன் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X